TNPSC Current Affairs : February-12-2021
இன்றைய நடப்பு நிகழ்வுகள்
நலன்புரி சார்ந்த அரசு திட்டங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடு

நாட்டின் முதல் சிஎன்ஜி டிராக்டர் அறிமுகம்:

 • அழுத்த ஊட்டப்பட்ட எரிவாயுவில் இயங்கும் நாட்டின் முதல் டிராக்டரை கட்கரி நாளை அறிமுகப்படுத்துகிறார்.
 • அழுத்த ஊட்டப்பட்ட எரிவாயுவில் இயங்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்ட நாட்டின் முதல் டீசல் டிராக்டரை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி அறிமுகப்படுத்துகிறார்.
 • ராவ்மத் டெக்னோ சொல்யூஷன்ஸ் மற்றும் டொமசெட்டோ அக்கில் இந்தியா ஆகியவற்றால் செய்யப்பட்ட இந்த மாற்றம், செலவுகளை குறைப்பதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த உதவுவதோடு, ஊரக இந்தியாவில் வேலைவாய்ப்புகளையும் அதிகரிக்கும்.
இன்றைய நடப்பு நிகழ்வுகள்
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு

ஆஸ்கரின்: 93 வது அகாடமி விருதுகள் விழா 2021 ஏப்ரல் 25 ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ளன.

இன்றைய நடப்பு நிகழ்வுகள்
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு

இந்தியா சார்பில், இயக்குநர் கரிஷ்மா தேவ் துபேவின் 'பிட்டு' குறும்படம் ஆஸ்கர் போட்டிக்கு தேர்வாகி உள்ளது. இன்று 9 பிரிவுகளுக்கான ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியல் வெளியிடப்பட்டது.

இன்றைய நடப்பு நிகழ்வுகள்
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு

உலகில் மலிவான ஏசி பயணம்! இந்திய ரயில்வேயின் முதல் AC 3-Tier Economy Class

RRB /TNPSC CURRENT AFFAIRS
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு

15 வயதிலேயே கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று, இந்தியாவின் சதுரங்க ராணி என்று அழைக்கப்படுகிறார் - கோனேரு ஹம்பி.

RRB /TNPSC CURRENT AFFAIRS
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு

‘ஹோப்’ விண்கல பயணம். ‘நம்பிக்கை'  விண்கலம் 

 • ஐக்கிய அரபு அமீரகம் 2020 ஜூலை  19-ந் தேதி ‘நம்பிக்கை' என்ற விண்கலத்தை வளைகுடா நாடுகளில் முதல் முறையாக  செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியது.
 • எடை:  1.3 டன் எடை
 • விண்கலம் ஜப்பானில் உள்ள தானேகஷிமா விண்வெளி மையத்தில் இருந்து எச்-2ஏ ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.
 • 2021-ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகம் நிறுவப்பட்டதன் பொன்விழா ஆண்டு ஆகும்.
 • இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் ‘நம்பிக்கை' விண்கலம் 49 கோடியே 50 லட்சம் கி.மீ. விண்வெளியில் பயணித்து, 201 நாட்கள் பயணம் செய்து, செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையை சென்றடைந்தது.
 • அங்கு இது செவ்வாய் வளிமண்டலத்தின் முதல் முழுமையான படத்தை வழங்கும்.
 • அமீரக அதிபர் மேதகு ஷேக் கலீபா பின் ஜாயித் அல் நஹ்யான் வழிகாட்டுதலில் 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் அமீரகத்தின் செவ்வாய் கிரக பயண திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
‘ஹோப்’ விண்கலம்
 • இந்த பயணத்திட்டத்தில் முதல் முறையாக அமீரகத்தில் முற்றிலும் உருவாக்கப்பட்ட ‘ஹோப்’ விண்கலம் ஒன்றை 2021-ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்புவது இதன் நோக்கமாகும்.
 • இதற்கான முன்தயாரிப்பு பணிகளை அமீரக துணை அதிபரும், துபாய் ஆட்சியாளருமான மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் கடந்த 2016-ம் ஆண்டில் தொடங்கி வைத்தார்.இந்த விண்கலமானது மனிதர்கள் இல்லாமல் அனுப்ப திட்டமிடப்பட்டது.அதன்படி விண்கலத்தை உருவாக்கும் பணியானது துபாய் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் விண்வெளி மையத்தின் சார்பில் நடைபெற்றது.
 • அந்த விண்கலத்தை 200 அமீரக பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் உருவாக்கினார்கள்.
 • இந்த ஆண்டில் அமீரகத்தின் 50-வது தேசிய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை கொண்டாடும் வகையில் இந்த செவ்வாய் கிரக பயண திட்டமானது செயல்படுத்தப்பட்டது.
விண்கலத்தில் உள்ள சிறப்பு கருவிகள்
 • இந்த விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள சிறப்பு ஆய்வு கருவிகள் மூலம் செவ்வாய் கிரகத்தின் மேலடுக்கில் உள்ள காலநிலை, பனி மேகங்கள், அங்குள்ள வானில் உள்ள காற்று மண்டலத்தில் கலந்துள்ள ஆக்சிஜன், ஹைட்ரஹன் மூலக்கூறுகளின் அளவு ஆகியவை ஆய்வு செய்யப்பட உள்ளது. இதற்காக சிறப்பு உணரும் பகுதிகளுடன் கூடிய 3 கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
 • செவ்வாய் கிரகத்தின் பரப்பில் இருந்து அதிகபட்சமாக 49 ஆயிரத்து 380 கி.மீ உயரத்தில் இருந்தும், குறைந்தபட்சமாக 1000 கி.மீ தொலைவில் இருந்தும் தகவல்களை அளிக்க உள்ளது. இந்த ‘ஹோப்’ விண்கலம் செவ்வாய் கிரகத்தை முழுமையாக சுற்றிவர 55 மணி நேரம் எடுத்துக்கொள்ளும்.
நீண்ட பயணம்
 • அமீரகத்தின் ‘ஹோப்’ விண்கலம் கடந்து சென்ற மாபெரும் விண்வெளி பயணம் மிக நீண்ட தொலைவானதாகும்.
 • பூமியில் இருந்து மிக அருகாமையில் வரும்போது செவ்வாய் கிரகமானது 6 கோடி கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும்.
 • ஆனால் விண்கலம் ஒன்று அதன் சுற்றுவட்டப்பாதையை அடைய வேண்டும் என்றால் 49 கோடியே 35 லட்சம் கி.மீ தொலைவு பயணம் செய்தாக வேண்டும்.
 • அதற்காக ‘ஹோப்’ விண்கலம் பூமியில் இருந்து மணிக்கு 39 ஆயிரத்து 600 கிலோ மீட்டர் வேகத்தில் விண்ணில் ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 • இந்த ‘ஹோப்’ விண்கலம் விண்வெளியில் மனிதர்களால் கற்பனை செய்ய முடியாத அளவில் மணிக்கு 1 லட்சத்து 26 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்தது.
204 நாட்கள்
 • பின்னர், செவ்வாய்கிரகத்திற்கு மிக அருகில் சென்றவுடன் அதன் வேகமானது மணிக்கு 18 ஆயிரம் கிலோமீட்டர் வேகமாக குறைக்கப்பட்டது.
 • இதில் பூமியில் இருந்து செவ்வாய்கிரகத்திற்கு இந்த விண்கலம் சென்றடைய 204 நாட்கள் எடுத்துக்கொண்டது.
 • அதாவது 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் 20-ந் தேதி தொடங்கிய பயணம் இந்த ஆண்டில் நேற்று செவ்வாய் கிரகத்தின் அருகே சென்றடைந்தது.
 • இதற்காக கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஜப்பான் நாட்டில் உள்ள டனகஷிமா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இந்த விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.
RRB /TNPSC CURRENT AFFAIRS
நலன்புரி சார்ந்த அரசு திட்டங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடு

உத்யானோத்சவ்’ நிகழ்ச்சி

 

 • குடியரசுத் தலைவர் மாளிகையின் வருடாந்திர ‘உத்யானோத்சவ்’ நிகழ்ச்சியை 2021 பிப்ரவரி 12 அன்று குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைக்கிறார்.
 • பிப்ரவரி 13 முதல் மார்ச் 21 வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை (பராமரிப்பு தினமான திங்கட்கிழமை தவிரமுகலாயர் தோட்டம் பொது மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்படும்.
RRB /TNPSC CURRENT AFFAIRS
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு

தூதர்கள்

 • எல் சல்வேடார் குடியரசு நாட்டின் தூதர் திருமிகுகில்லர்மோ ரூபியோ ஃபூன்ஸ்
 • பனாமா தூதர் திருமதியாசீல் அலின்ஸ் புரில்லோ ரிவேரா , 
 • துனிசியா தூதர் திருமதிஹயட் தல்பி
 • இங்கிலாந்து தூதர்  திருஅலெக்ஸ் எலிஸ்
 • அர்ஜென்டினா தூதர்  திருஹூகோ ஜேவியர் கோபி
RRB /TNPSC CURRENT AFFAIRS
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு

யுனானி தினம் 2021 மற்றும் யுனானி மருத்துவம் குறித்த தேசிய மாநாடு:

 • இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் யுனானி மருத்துவத்திற்கான மத்திய குழுயுனானி மருத்துவம் குறித்த தேசிய     மாநாட்டை நடத்தியது.
 • யுனானி மருத்துவம்கொவிட்-19 காலத்தில் வாய்ப்புகள் மற்றும் சவால்கள்’ என்னும் தலைப்பிலான இந்த மாநாட்டை இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுஆயுர்வேதம்யோகா & இயற்கை மருத்துவம்யுனானிசித்தா, சோவா-ரிகா மற்றும் ஹோமியோபதி இணை அமைச்சர் (தனிப் பொறுப்புதிருகிரண் ரிஜிஜூ துவக்கி வைத்தார்.
RRB /TNPSC CURRENT AFFAIRS
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு

‘இனிப்பு புரட்சி’

 • தற்சார்பு இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதியாக இது அறிவிக்கப்பட்டுள்ளது
 • தேசிய தேனீ வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் தேசிய தேனீவளர்ப்பு & தேன் இயக்கம்அறிவியல் பூர்வமான தேனீ வளர்ப்பின் மூலம்  ‘இனிப்பு புரட்சி’ இலக்கை எட்டுவதை லட்சியமாகக் கொண்டுள்ள்து.