TNPSC Current Affairs : February-11-2021
RRB /TNPSC CURRENT AFFAIRS
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு

 

 • கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நிறைவடைந்த பின் குடியுரிமை சட்டத்தின் மூலம் குடியுரிமை வழங்குவோம் என மேற்குவங்கத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
 • தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள முகாலய தோட்டம் பிப்ரவரி 13ஆம் தேதி திறக்கப்படுவதாக குடியரசுத் தலைவர் செயலகம் தெரிவித்துள்ளது.
 • பிகார் முதல்வர் நிதிஷ்குமார் பிரதமர் மோடியை தில்லியில் சந்தித்து பேசினார்.
 • உத்தரகண்ட் மாநிலம் சமோலியில் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த மீட்புப் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளது.
 • தேர்தல் முடிவதற்கும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கூறுவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
 • தேர்தலில் வாக்குப்பதிவின்போது பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை முழுமையாக நம்புவதாக மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
 • தெலங்கானாவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை முதல்வர் சந்திரசேகர ராவ் நாய்களுடன் ஒப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 • மேற்கு வங்கு மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்று பரவி வருவதையடுத்து, கேரளாவைச் சேர்ந்த பயணிகளுக்கு ஆர்டி-பி.சி.ஆர் பரிசோதனையை மகாராஷ்டிர அரசு கட்டாயமாக்கியுள்ளது. 
 • சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
 • இந்திய மண்ணின் ஒரு அங்குலத்தைக் கூட யாரும் எடுத்துக் கொள்ள இந்திய ராணுவம் அனுமதிக்காது என்று மாநிலங்களவையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
 • நாட்டில் 20.4 கோடிக்கும் கோடிக்கும் அதிகமானோருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
 • சென்னை துறைமுகம், காமராஜர் துறைமுகம் உள்ளிட்ட 12 முக்கிய துறைமுகங்களுக்குக் கூடுதல் அதிகாரங்கள் அளிக்கும் வகையிலான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
 • பாஜக தலைவர்கள் சமூகத்தில் பிளவு ஏற்படுத்தும் நோக்கத்தில் ரத யாத்திரையை பயன்படுத்தி வருவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டினார்.
 • உடல்நலக்குறைவால் நீண்ட நாள்கள் பாதிக்கப்பட்டிருந்த பிரபல மலையாள பாடகா் எம்.எஸ்.நசீம்  காலமானாா்.
 • ஏா் இந்தியா நிறுவனத்துக்கு மத்திய, மாநில அரசுகள் ரூ.498 கோடி பாக்கி செலுத்த வேண்டியுள்ளதாக விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்தாா்.
 • 33 நாடுகளில் இருந்து 328 செயற்கைகோள்களை இந்தியா இது வரை ஏவியுள்ளது என்று மக்களவையில் மத்திய அணு சக்தி மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சா் ஜிதேந்தர சிங் தெரிவித்தாா்.
 • அஸ்ஸாமை சோ்ந்த பொதுத்துறை நிறுவனமான பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு உர உற்பத்தி நிறுவனத்துக்கு ரூ.100 கோடி நிதியளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
 • இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் வளா்ச்சிக்கு இந்தியா முக்கிய பங்களிப்பு வழங்கி வருவதாக அமெரிக்க அரசு பாராட்டியுள்ளது.
 • புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லைகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சம்மன் அனுப்பவில்லை என்று மத்திய அரசு தெரிவித்தது.
 • குடியரசுத் தலைவரின் நாடாளுமன்ற உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.
 • ஏழுமலையான் தரிசனத்தை மிகவும் எளிதாக்க ஒரு நாள் சுற்றுலாத் திட்டத்தை இந்திய ரயில்வே சுற்றுலா உணவுக் கழகம் (ஐஆா்சிடிசி) தொடங்கி உள்ளது.

 

RRB /TNPSC CURRENT AFFAIRS
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு

தேசிய நிலக்கரி குறியீடு:

 • வருமான அடிப்படையில் நிலக்கரி சுரங்கங்களின் வர்த்தக ஏலத்தை நிலக்கரி அமைச்சகம் தொடங்கியுள்ளது
 • நிலக்கரியின் வெளிச்சந்தை விலைகளின் அடிப்படையில் வருமான அளவை நிர்ணயிக்கும் வகையில் ஓர் தேசிய நிலக்கரி குறியீடு நடைமுறைப்படுத்தப்பட்டது
 • நிர்ணயிக்கப்பட்ட அடிப்படை ஆண்டிலிருந்து குறிப்பிட்ட மாதத்தில் நிலக்கரியின் விலையில் ஏற்படும் மாற்றத்தை பிரதிபலிக்கும் விலை   குறியீடாக தேசிய நிலக்கரி குறியீடு (2017-18) செயல்படும்.
 • ஏற்றுமதி உள்ளிட்ட நிலக்கரியின் அனைத்து விற்பனை விலைகளையும் கருத்தில்கொண்டு இந்த குறியீடு தயாரிக்கப்படும்
 • கடந்த 2030ஆம் ஆண்டு ஜூன்4ஆம் தேதி இந்த குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டு அதுகுறித்த அறிவிப்பு நிலக்கரி அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
RRB /TNPSC CURRENT AFFAIRS
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு
 • மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத்துறை கொண்டு வந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு சீர்திருத்தங்களை நிறைவு செய்த 6வது மாநிலமாக கோவா உருவாகியுள்ளது.
 • இந்த சீர்திருத்தத்தை ஆந்திராமத்தியப் பிரதேசம்மணிப்பூர்ராஜஸ்தான்தெலங்கானா ஆகிய 5 மாநிலங்கள் ஏற்கனவே நிறைவு செய்திருந்தன. தற்போது 6வது மாநிலமாக கோவா இணைந்துள்ளது.
 • மத்திய அரசு கொண்டு வந்த 4 சீர்திருத்தங்களில்,17 மாநிலங்கள்குறைந்தது ஒன்றை நிறைவேற்றிகூடுதல் கடன் பெறுவதற்கான  அனுமதியைப்  பெற்றுள்ளனஇவற்றில் 13 மாநிலங்கள்ஒரே நாடுஒரே ரேசன் கார்டு திட்டத்தை அமல்படுத்தியுள்ளன.
 • 12 மாநிலங்கள் எளிதாக தொழில் செய்யும் சீர்திருத்தத்தை நிறைவேற்றியுள்ளன.
 • 6 மாநிலங்கள் உள்ளாட்சி அமைப்பு சீர்திருத்தத்தை நிறைவேற்றியுள்ளன.
 • 2மாநிலங்கள் மின்துறை சீர்திருத்தங்களை நிறைவேற்றியுள்ளன.  
 • இதற்காக இந்த மாநிலங்கள் மொத்தம் ரூ.76,512 கோடி கூடுதல் கடன் பெற ஒப்புதல் அளிக்கப்பட்டது.