TNPSC Current Affairs : February-10-2021
RRB /TNPSC CURRENT AFFAIRS
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு
  • ரயில்வே துறையின் சுகாதராப் பணியாளர்கள் 13,117 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் மக்களவையில் தெரிவித்துள்ளார்.
  • கேரளத்தின் புதிய தலைமைச் செயலராக மூத்த அரசு அதிகாரி வி.பி.ஜாய் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • அசாமில் உள்ள விமான நிலையங்களில் மார்ச் 1ஆம் தேதி முதல் கரோனா பரிசோதனை கட்டாயமில்லை என மாநில அரசு தெரிவித்துள்ளது.
  • மகாராஷ்டிரத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 4,243 மனித உரிமை மீறல் சம்பந்தப்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
  • கர்நாடக மாநிலம் ஹஸன் மாவட்டத்தில் நடந்து வரும் தொல்லியல் அகழ்வாராய்ச்சியில், ஹொய்சாலா கட்டடக் கலையில் கட்டப்பட்ட சமண கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடியை மாற்றக் கோரி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் முதல்வர் முதல்வர் நாராயணசாமி கோரிக்கை மனு அளித்துள்ளார்.
  • 7 மாத பயணத்திற்குப் பிறகு ஐக்கிய அரபு அமீரகத்தின் விண்கலம் செவ்வாய் கோளின் சுற்று வட்டப்பாதையை அடைந்துள்ளது.
  • தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் சதித்திட்டத்தின் பின்னால் உள்ள ராணுவத் தலைவர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கான உத்தரவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார். 
  • அமெரிக்க முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் மீது பதவி நீக்க விசாணையை முன்னெடுத்துச் செல்வதற்கு நாடாளுன்ற மேலவையான செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.
  • நேபாள நாடாளுமன்றத்தை கலைத்து அந்நாட்டு பிரதமா் கே.பி.சா்மா ஓலி மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிராக தாங்கள் நடத்தி வரும் போராட்டத்துக்கு இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் ஆதரவளிக்க வேண்டும்.
  • தென் ஆப்பிரிக்காவில் அஸ்ட்ரா ஸெனகாவின் தடுப்பூசி திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சா் ஜுவெலி மெக்கிஸ் தெரிவித்தாா்.
  • இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிரான ஊழல் வழக்கு விசாரணை தொடங்கியுள்ளதையடுத்து அவா் நீதிமன்றத்தில் ஆஜரானாா்.