TNPSC Current Affairs : February-06-2021
RRB /TNPSC CURRENT AFFAIRS
முக்கிய நபர்கள் மற்றும் செய்திகளில் இடங்கள்

இடி, மின்னலை ஆய்வு செய்யும் ஆராய்ச்சி நிலையம்

 • நாட்டிலேயே முதன்முறையாக, இடி, மின்னலை ஆய்வு செய்யும் ஆராய்ச்சி நிலையம், ஒடிஸா மாநிலம், பாலாசோரில் அமைய உள்ளது.

நோக்கம்:

 • மின்னலால் ஆண்டுதோறும் நிகழும் உயரிழப்புகளைத் தடுப்பதே இதன் நோக்கம் ஆகும்.
 • ‘இந்தியாவின் சூறாவளி மனிதா்’ என்று அழைக்கப்படுபவா் - டாக்டா் மிருத்யுஞ்சய் மொஹாபாத்ரா (இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைவா்).
 • சூறாவளி, புயல் தொடா்பான இவரது அனுமானங்கள் மிகத் துல்லியமாக இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலமாக உயிா்ச்சேதங்கள் பலமுறை தடுக்கப்பட்டுள்ளன.
 • மின்னல் மற்றும் இடி குறித்து தனித்துவமான ஆராய்ச்சி நிலையத்தை, பாலாசோரில் இந்திய வானிலை ஆய்வு மையம் அமைக்க உள்ளது.
 • பருவமழை ஆராய்ச்சி மையம் விரைவில் மத்திய பிரதேச மாநிலம், போபாலில் அமைக்கப்பட உள்ளது.
 • மத்திய புவி அறிவியல் அமைச்சகம், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பு (டிஆா்டிஓ), இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ), இந்திய வானியல் ஆய்வு மையம் (ஐஎம்டி) ஆகியவை ஒருங்கிணைந்து இந்த இரு ஆராய்ச்சி நிலையங்களையும் அமைக்க உள்ளன.
 • பாலாசோரில் ஏற்கெனவே இஸ்ரோ, டிஆா்டிஓ, ஐஎம்டி அமைப்புகளுக்கு தனி ஆய்வகங்கள் உள்ளன.
 • பாலாசோா் அருகிலுள்ள சண்டிப்பூரில் ஏற்கெனவே ஒருங்கிணைந்த ஏவுகணை சோதனை மையம் அமைத்துள்ளது.
 • வானாய்வு மையமும் (அப்ஸா்வேட்டரி) விரைவில் அமைக்கப்பட உள்ளது.
RRB /TNPSC CURRENT AFFAIRS
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு

சுகாதாரத் துறைக்குச் செய்வது செலவல்ல, முதலீடு!

 • இந்தியாவின் முதல் கரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டு ஓராண்டு நிறைவுபெற்றிருக்கும் வேளையில் இந்த ஓராண்டும் இந்தியாவுக்கு எவ்வளவு சோதனை மிகுந்த காலகட்டமாக இருந்தது என்பதை நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.
 • இதுவரை சுமார் ஒரு கோடியே 7 லட்சத்து 36 ஆயிரம் பேருக்கு இந்தியாவில் கரோனா தொற்று ஏற்பட்டு, ஒரு லட்சத்து 54 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன.
 • சுகாதாரத் துறையானது தனது மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட ஊழியர்களைக் கொண்டு இந்தப் பெருந்தொற்றுக் காலகட்டத்தைத் திறம்படச் சமாளித்ததை ஒருபக்கம் பாராட்டியாக வேண்டும் என்றால், இன்னொரு பக்கம் சுகாதாரக் கட்டமைப்புக்கு அரசு எந்த அளவுக்குச் செலவிடுகிறது என்பதையும் பார்க்க வேண்டும்.
 • 2018-2019-ல் சுகாதாரத் துறைக்கு இந்திய அரசு தனது மொத்த செலவினத்தில் 4.5% மட்டுமே செலவிட்டிருக்கிறது; இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.3% ஆகும்.
 • இந்தோனேஷியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகள் தங்கள் நிதிநிலை அறிக்கையில் 7% - 10% வரை சுகாதாரத்துக்குச் செலவிடுகின்றன.
 • இந்தியாவில் கிட்டத்தட்ட 80 கோடி ஏழைகளும் 30-35 கோடி நடுத்தர வர்க்கத்தினரும் வாழ்கிறார்கள்.
 • இவர்கள் குடும்பத்தில் ஒருவருக்குப் புற்றுநோய், இதயநோய் உள்ளிட்ட செலவு அதிகம் பிடிக்கும் கொடிய நோய்கள் ஏற்பட்டால், அந்தக் குடும்பத்தின் பொருளாதார நிலையே செயலிழந்துபோகும் நிலைதான் காணப்படுகிறது.
 • இந்தியாவில் ஒவ்வொரு குடும்பமும் தனது ஒட்டுமொத்த மருத்துவச் செலவில் 60% வரை தங்கள் கையிலிருந்துதான் செலவு செய்ய வேண்டியிருக்கிறது.
 • இந்தியா சுகாதாரத் துறைக்குச் செய்வதை செலவு என்று நினைக்கக் கூடாது; வளமான முதலீடு என்றே நினைக்க வேண்டும். ஏனெனில், ஆரோக்கியமான ஒரு நபரின் உற்பத்தித் திறன் கணிசமான அளவு அதிகமாக இருக்கிறது. அதேபோல், ஆரோக்கியமான குழந்தைகள் படிப்பிலும் விளையாட்டுகளிலும் நன்கு கவனம் செலுத்துகின்றன.
 • ஆகவே, கரோனா காலத்துக்குப் பின் ஒன்றிய அரசானது பெற்ற விழிப்புணர்ச்சியைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வதோடு இந்திய மருத்துவக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்குத் தனது நிதிநிலை அறிக்கையில் இதுவரை ஒதுக்குவதைவிட இரண்டு மடங்குக்கும் மேல் ஒதுக்க வேண்டும். அப்போதுதான் கரோனா பெருந்தொற்றையும் சரி... அது போன்ற எதிர்கால அச்சுறுத்தல்களையும் சரி நம்மால் உறுதியாக எதிர்கொள்ள முடியும்.

நன்றி: ஹிந்து