TNPSC Current Affairs : February-02-2021
RRB /TNPSC CURRENT AFFAIRS
தற்போதைய சமூக பொருளாதார சிக்கல்கள்

சமாளித்துவிட்டாா்!

 • முன்னாள் நிதியமைச்சா் ப. சிதம்பரம் தொடங்கி வைத்த திருக்குறளுடன் பட்ஜெட் கூட்ட உரையை தாக்கல் செய்யும் வழக்கத்தை இப்போதைய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனும் பின்பற்றுவதற்கு அவருக்குப் பாராட்டுகள்.
 • அடுத்த நிதியாண்டுக்கான நிா்மலா சீதாராமனின் நிதிநிலை அறிக்கையில் சில புதுமைகள் இருக்கின்றன.
 • முதன்முறையாக காகிதம் பயன்படுத்தப்படாமல் எண்மப் பதிவாக கைக்கணினியைப் பயன்படுத்தி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
 • கொவைட் 19 கொள்ளை நோயால் தகா்ந்தும் தளா்ந்தும் போயிருக்கும் இந்தியப் பொருளாதாரத்துக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிப்பதற்காக சில முக்கியமான அடிப்படை முனைப்புகளுடன் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
 • சாதாரணமாக நிதிப்பற்றாக்குறையை 3%-லிருந்து 3.8%-க்குள் கட்டுக்குள் வைத்திருப்பதுதான், நிதியமைச்சா்களின் முனைப்பாக இருக்கும்.
 • இந்த முறை மொத்த ஜிடிபியில் 9.5% அளவில் நிதிப்பற்றாக்குறை காணப்படுகிறது என்பது வரலாறு காணாத அதிகரிப்பு.
 • கடந்த பத்து மாத கொள்ளை நோய்த்தொற்றுக்கால பொருளாதார தேக்கநிலைக்குப் பிறகும்கூட நிதிப்பற்றாக்குறை 9.5% அளவில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதே மிகப் பெரிய ஆறுதல்.
 • 2021 - 22-க்கான நிதிப்பற்றாக்குறை 6.8% அளவில் இருக்கும் என்று நிதியமைச்சா் கணித்திருக்கிறாா்.
 • நமது பொருளாதாரம் இறக்குமதி சாா்ந்த பொருளாதாரமாக இருந்திருந்தால், பத்து மாத கொள்ளை நோய்த்தொற்று பாதிப்பில் இந்தியா தகா்ந்திருக்கும்.
 • நம்மைக் காப்பாற்றியது வேளாண் உற்பத்தி என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பட்டினிச் சாவில்லாமல் நாம் காப்பாற்றப்பட்டது மட்டுமல்ல, அத்தனை தொழில்களும் முடங்கியும்கூட, இந்தியப் பொருளாதாரம் வேளாண் உற்பத்தியால் காப்பாற்றப்பட்டிருக்கிறது.
 • தேக்கநிலையை நோக்கி நகா்ந்துவிட்ட இந்தியப் பொருளாதாரத்தை மீண்டும் உயிா்த்தெழ வைக்க பல அறிவிப்புகளை இந்த நிதிநிலை அறிக்கையில் நிா்மலா சீதாராமன் செய்திருக்கிறாா்.
 • தேக்கநிலையை நோக்கி நகா்ந்துவிட்ட இந்தியப் பொருளாதாரத்தை மீண்டும் உயிா்த்தெழ வைக்க பல அறிவிப்புகளை இந்த நிதிநிலை அறிக்கையில் நிா்மலா சீதாராமன் செய்திருக்கிறாா். அதில் குறிப்பிடத்தக்க அறிவிப்பு என்று சொன்னால் அது கட்டமைப்பு வசதிகளை அதிகரிப்பதற்கும், சுகாதார கட்டமைப்பை மேம்படுத்துவதற்குமான ஒதுக்கீடுகள்.
 • நிதியமைச்சா் அறிவித்திருக்கும் நெடுஞ்சாலைத் திட்டங்கள், மெட்ரோ ரயில் திட்டங்கள், சாலை கட்டமைப்பு போக்குவரத்து மேப்பாட்டு திட்டங்களில் பெரும்பகுதி சட்டப்பேரவைத் தோ்தல் நடக்க இருக்கும் கேரளம், தமிழ்நாடு, மேற்கு வங்கம், அஸ்ஸாம் மாநிலங்களைக் குறிவைத்து அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது தேசியப் பாா்வை இல்லாத அரசியல் கண்ணோட்டம்.
 • தடுப்பூசித் திட்டம், ஆராய்ச்சி, வீட்டுவசதி, முதியோா் நலம், ஏற்றுமதி ஊக்குவிப்பு, மூத்த குடிமக்களுக்கான வரிச்சலுகை, வங்கித் துறை ஒழுங்காற்று நடவடிக்கை, விவசாயிகளின் வருவாய் அதிகரிப்பு என்று பல்வேறு அறிவிப்புகளுடன் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனின் 2021 - 22-க்கான நிதிநிலை அறிக்கை, ஏமாற்றவில்லை.
 • ஒட்டுமொத்த உலகத்தையும் கொள்ளை நோய்த்தொற்று கொள்ளை கொண்ட கொடுமையைத் தொடா்ந்து தாக்கல் செய்யப்பட்டிருக்கும் 2021 - 22-க்கான பிரதமா் நரேந்திர மோடி அரசின் நிதிநிலை அறிக்கை, ‘ஆஹா ஓஹோ’ என்று பாராட்டும்படியாக இல்லாவிட்டாலும், ‘ஏமாற்றம்’ என்கிற ஒற்றை வாா்த்தையில் நிராகரிக்கும் அளவில் மோசமாகவும் இல்லை.

நன்றி: தினமணி

RRB /TNPSC CURRENT AFFAIRS
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு
 • நியூசிலாந்து நாட்டில் ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் தயாரிப்பில் உருவான கரோனா தடுப்பூசிக்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
 • கரோனா தொற்று பரவல் அச்சுறுத்தல் காரணமாக இந்தியா உள்பட 20 நாடுகளின் பயணிகளுக்கு செளதி அரேபியா தற்காலிகத் தடை விதித்துள்ளது.
 • மியான்மரில் ராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டது தவிர்க்க முடியாதது என அந்நாட்டின் ராணுவத் தலைவர் மின் ஆங் ஹ்லேங் தெரிவித்துள்ளார்.
 • ஐக்கிய அரபு அமீரகத்தில் கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 10 மாதங்களாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் பிப்ரவரி 14 முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளது.
 • அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான ‘நாசா’வின் இடைக்கால தலைமை பணிக்குழு ஒருங்கிணைப்பு அதிகாரியாக (சீஃப் ஆஃப் ஸ்டாஃப்) இந்திய வம்சாவளி விஞ்ஞானி பவ்யா லால் நியமிக்கப்பட்டுள்ளாா்.
 • கரோனா முதல் முதலில் பரவத் தொடங்கிய சீனாவின் வூஹான் நகரிலுள்ள விலங்குகள் மருத்துவமனையில், உலக சுகாதார அமைப்பின் நிபுணா் குழு செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தது.
 • கோடைகாலம் முடிவதற்குள் ஜெர்மன் நாட்டில் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று அந்நாட்டின் அதிபர் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்துள்ளார்.
 •