TNPSC Current Affairs : February-02-2020
ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியன் பட்டம்
விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றார் சோபியா கெனின்.

  1. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் சோபியா கெனின் சாம்பியன் பட்டம் வென்றார்.
  2. ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி சுற்றில் 14-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் சோபியா கெனின், போட்டித் தரவரிசையில் இடம் பெறாத ஸ்பெயினின் கார்பைன் முகுருசாவை எதிர்த்து விளையாடினார்.
  3. சாம்பியன் பட்டம் வென்ற சோபியா கெனின் கோப்பையுடன் சுமார் ரூ.29.45 கோடி பரிசுத் தொகையை பெற்றார். 2-வது இடம் பிடித்த கார்பைன் முகுருசாவுக்கு ரூ.14.75 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது.