இன்றைய நடப்பு நிகழ்வுகள்
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு
வரும் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்களுக்கு சிறப்பு அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் வெளியிட்டு உள்ளார்.
நாட்டில் மாசுபாட்டை தவிர்க்க நகர்புற தூய்மை இந்தியா திட்டம் 2.0 அறிமுகம் செய்யப்படும் என நிதி அமைச்சர் தெரிவித்தார்.
தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக ராஜீவ் ரஞ்சன் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்திய விண்வெளித் துறையின் கீழ் புதிய பொதுத்துறை நிறுவனமாக நியூ ஸ்பேஸ் இந்தியா தொடக்கப்படவுள்ளது என நிர்மலா சீதாராமன் கூறினார்.
மத்திய பட்ஜெட்டில் வேளாண், கல்வி, மின், துறைமுக திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சென்னையில் ரூ.63 ஆயிரம் கோடி செலவில் மெட்ரோ 2வது கட்ட திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
இந்தியாவின் வளர்ச்சிக்கு 6 முக்கிய துறைகள் தூண்களாக கவனிக்கப்படும் என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
நாட்டில் பேரிடர் கால சூழலில் நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் தயாரானது என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட் தேஜஸ் மார்க்-2 விமானத்தின் புதிய ரகம், அடுத்த ஆண்டில் அறிமுகம் செய்யப்படும், என எச்.ஏ.எல்., எனப்படும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆர். மாதவன் கூறியுள்ளார்.
கொரோனா தடுப்பு மருந்து வந்தபோதும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
இந்தியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கையில் மராட்டியம் முதலிடத்தில் உள்ளது.
மகதாயி நதிநீரை பங்கீட்டு கொள்ளும் விவகாரத்தில் கர்நாடகத்திற்கு அநீதி ஏற்பட அனுமதிக்க மாட்டோம் என்று முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
RRB /TNPSC CURRENT AFFAIRS
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்புநிதிநிலை அறிக்கை (2021-2022): சிறப்பம்சங்கள்-1
- நிதிநிலை அறிக்கை (2021-2022) யை மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், மக்களவையில் தாக்கல் செய்யத் தொடங்கினார்.
- இந்த தசாப்தத்தின் முதல் நிதிநிலை அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த பட்ஜெட் முதன்முறையாக டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
- நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றி வரும் அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் கொரோனா காலகட்டத்தில் 800 மில்லியன் பொதுமக்களுக்கு உணவு தானியங்கள் தடையின்றி வழங்கப்பட்டதாகக் கூறினார்.
- கொரோனா பாதிப்பிலிருந்து பொதுமக்களை மீட்க, ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13 சதவீதம் அளவுக்கு அதாவது சுமார் 27 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டதாக அமைச்சர் கூறினார்.
- உலகிலேயே மிக குறைந்த இறப்பு விகிதமாக ஒரு மில்லியனுக்கு 112 பேர் என்ற அளவில் இந்தியாவில் கொரோனா காலத்தில் உயிரிழப்பு இருந்ததாக அமைச்சர் தெரிவித்தார்.
- ஆஸ்திரேலியாவில் இந்திய இளம் கிரிக்கெட் வீரர்கள் பெற்றுள்ள வெற்றி நாட்டின் இளைய சமுதாயத்திற்கு உத்வேகத்தையும், வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வத்தையும் ஏற்படுத்தி இருப்பதாக அமைச்சர் கூறினார்.
- உலகளாவிய பெருந்தொற்று காரணமாக சர்வதேச பொருளாதாரம் நிலைகுலைந்த போதிலும் மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு நாட்டின் பொருளாதாரம் சிறப்பாக செயல்படும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் அவர் கூறினார்.
- தற்சார்பு இந்தியா நடவடிக்கைகள் சுகாதார துறைக்கும் விரிவுபடுத்தப்படுவதாக கூறிய அமைச்சர், ஆத்ம நிர்பர் ஸ்வஸ்த் பாரத் திட்டம் அமல்படுத்தப்படவிருப்பதாகக் கூறினார்.
- தேசிய சுகாதார இயக்கத்திற்கு உறுதுணையாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.
-
MORE CURRENT AFFAIRS VIEW ALL
- TNPSC Current Affairs - 2019