படத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாவல்கள்
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்புதில்லானா மோகனாம்பாள் - தில்லானா மோகனாம்பாள்:
`தில்லானா மோகனாம்பாள்’ திரைப்படம் கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் எழுதி ஆனந்த விகடனில் வெளிவந்த `தில்லானா மோகனாம்பாள்' நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. சிவாஜி, பத்மினி நடிக்கக் கலையால் இணைந்த இரு உள்ளங்கள் காதலில் இணைய எதிர்கொள்ளும் போராட்டங்களை சுவையாக `தில்லானா மோகனாம்பாளில்' சொல்லியிருப்பார் இயக்குநர் ஏ.பி. நாகராஜன்.
லாக் அப் - விசாரணை:
சந்திரகுமார் எழுதிய `லாக்கப்’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு தயாரானது `விசாரணை’ திரைப்படம். சந்திரகுமாரின் அனுபவத்திலிருந்து எழுதப்பட்டது `லாக்கப்’ நாவல். அதேபோல, இந்தப் படத்தில் வரும் சம்பவங்களில் பெரும்பான்மையானவை நிஜ வாழ்க்கையிலிருந்து எடுக்கப்பட்டவைதான். தினேஷ், முருகதாஸ் மற்றும் சமுத்திரக்கனி நடிக்க உண்மைச் சம்பவங்களின் பின்னணியை இணைத்து, நேர்மையான, உண்மையான அரசியல் சினிமாவாக `விசாரணை'யைத் தந்தார், இயக்குநர் வெற்றிமாறன்.
எரியும் பனிக்காடு - பரதேசி:
`பரதேசி’ திரைப்படம் `ரெட் டீ' என்ற ஆங்கில நாவலை அடிப்படையாகக் கொண்டது. தமிழில் இந்நாவலை `எரியும் பனிக்காடு' என்ற பெயரில் இரா.முருகவேள் மொழிபெயர்த்திருக்கிறார். 1930 களில் நடந்த உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்டு இத்திரைப்படம் உருவானது. மேலும், பிரபல எழுத்தாளர் நாஞ்சில் நாடன் இந்தத் திரைப்படத்துக்கு வசனம் எழுதினார். அதர்வா, வேதிகா மற்றும் தன்ஷிகா நடிக்க அதுவரை தமிழ் திரையில் சொல்லப்படாத கொத்தடிமைச் சமூகத்தின் சரித்திரத்தை எளிமையாக, மிகவும் வலிமையாக `பரதேசி'யில் முன்வைத்தார் இயக்குநர் பாலா.
பொன்னர் சங்கர் - பொன்னர் சங்கர்:
`பொன்னர் சங்கர் ' திரைப்படம் முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய `பொன்னர் சங்கர்' நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இப்படத்தின் கதை அண்ணமார் சாமி கதை என்று கொங்கு வட்டாரத்தில் கூறப்படும் பொன்னர் சங்கர் எனும் இருவரின் கதையாகும். பிரசாந்த், குஷ்பு, ராஜ்கிரண், நெப்போலியன் என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடிக்க கலைஞரின் அருந்தமிழ் வசனத்தில் வெளியானது இந்த `பொன்னர் சங்கர்'.
ஏழாம் உலகம் - நான் கடவுள்:
`நான் கடவுள்' திரைப்படம் ஜெயமோகன் எழுதிய `ஏழாம் உலகம்' எனும் நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. ஆர்யா, பூஜா, மொட்டை ராஜேந்திரன் நடிக்க அதுவரை திரையில் பேசப்படாத பிச்சைக்காரர்களின் துயரங்கள், கொண்டாட்டங்கள், உறவுகள் ஆகியவற்றை முதன்முதலாக `நான் கடவுள்' மூலம் பேசினார் இயக்குநர் பாலா.
ஒன்பது ரூபாய் நோட்டு - ஒன்பது ரூபாய் நோட்டு:
தங்கர்பச்சான் எழுதிய `ஒன்பது ரூபாய் நோட்டு' என்னும் நாவலை அடிப்படையாகக் கொண்டு அவரே இத்திரைப்படத்தை உருவாக்கினார். சத்யராஜ், அர்ச்சனா நடிக்க செல்வச் செழிப்புடன் பிள்ளைகளை வளர்த்து செல்லாக் காசாகிப் போன ஒருவரின் கதையாக ஒன்பது ரூபாய் நோட்டைத் தந்திருந்தார் இயக்குநர் தங்கர் பச்சான்.
கல்வெட்டு - அழகி:
`அழகி’ திரைப்படம் தங்கர்பச்சான் எழுதிய `கல்வெட்டு' என்னும் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி நடிக்க அறியாப் பருவத்தில் மனதில் குடிகொள்ளும் காதலையும் காலாகாலாத்துக்கும் அது செய்யும் அவஸ்தைகளையும் மயிலிறகைக் கொண்டு வருடுவது போன்று ஒரு மென்மையான காதல் கதையாக `அழகி' யைத் தந்தார் இயக்குநர் தங்கர் பச்சான்.
தலைமுறைகள் - மகிழ்ச்சி:
`மகிழ்ச்சி’ திரைப்படம் நீல. பத்மநாபன் எழுதிய `தலைமுறைகள்' நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. வ. கௌதமன், அஞ்சலி நடிக்க, அக்கா - தம்பி உறவுகளுக்குள் இருக்கும் நெருக்கமான பாசத்தை அழகாகச் சித்திரித்தது இந்த `மகிழ்ச்சி’ திரைப்படம். இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்தது மட்டுமல்லாமல் திரைக்கதை, வசனத்துடன் படத்தை இயக்கினார் வ.கௌதமன்.
தலைகீழ் விகிதங்கள் - சொல்ல மறந்த கதை:
`சொல்ல மறந்த கதை' திரைப்படம் நாஞ்சில் நாடன் எழுதிய `தலைகீழ் விகிதங்கள்' என்னும் நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. சேரன், ரதி நடிக்க மாமனார் வீட்டில் வீட்டோடு மாப்பிள்ளையாக மருமகன் படும் துயரங்களையும் அவமானங்களையும் `சொல்ல மறந்த கதை'யாக செல்லுலாய்டில் பதிவு செய்தார் இயக்குநர் தங்கர் பச்சான்.
கள்வனின் காதலி - கள்வனின் காதலி:
`கள்வனின் காதலி’ திரைப்படம் ஆனந்த விகடனில் கல்கி எழுதிய முதல் சமூக நாவலான `கள்வனின் காதலி'யை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது. சிவாஜி, பானுமதி நடிக்க வி.எஸ்.ராகவன் இயக்கத்தில் தீய செயல்களுக்குக்கூட அன்பே தூண்டுகோல் என்ற கருத்தினை அழகாகப் பதிவு செய்தது இந்த `கள்வனின் காதலி'.
தியாக பூமி - தியாக பூமி:
`தியாக பூமி’ திரைப்படம் ஆனந்த விகடனில் கல்கி எழுதிய `தியாக பூமி' என்னும் நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. பாபநாசம் சிவன், கே.ஜே.மகாதேவன், எஸ்.டி. சுப்புலட்சுமி நடிக்க கே. சுப்பிரமணியனின் இயக்கத்தில் அன்றைய சுதந்திரத்துக்கான விதையாக தியாக பூமி மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியது.
பிரிவோம் சந்திப்போம் - ஆனந்த தாண்டவம்:
`ஆனந்த தாண்டவம்’ திரைப்படம் சுஜாதா ஆனந்த விகடனில் எழுதிய `பிரிவோம் சந்திப்போம்' நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. சித்தார்த் வேணுகோபால், தமன்னா, ருக்மணி நடிக்க அமெரிக்க மாப்பிள்ளைக்காக உள்ளூர் காதலை உதாசீனப்படுத்தும் இளம் பெண்ணையும், அமெரிக்காவில் இருந்தாலும் இந்திய மாப்பிள்ளையைத் தேர்வு செய்யும் இன்னொரு பெண்ணையும் பற்றிய கதையாக ஆனந்த தாண்டவத்தை இயக்கியிருந்தார் ஏ.ஆர்.காந்தி.
ஆ - சைத்தான்:
`சைத்தான்' திரைப்படம் சுஜாதா எழுதிய `ஆ' நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. விஜய் ஆண்டனி, அருந்ததி நடிக்க ஐ. டி ஊழியர் தலைக்குள் கேட்கும் ஒரு குரலும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் திகில் `சைத்தானாக' இயக்கியிருந்தார் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி.
விக்ரம் - விக்ரம்:
`விக்ரம்' திரைப்படம் சுஜாதா எழுதிய விக்ரம் நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. கமல், அம்பிகா நடிக்க அக்னிபுத்திரன் என்ற ஏவுகணையைக் கடத்தி விடும் கும்பலிலிருந்து விக்ரம் எப்படி நாட்டைக் காப்பாற்றுகிறார் என்பதைச் சுவாரஸ்யமாக படமாக்கியிருந்தார் இயக்குநர் ராஜசேகர்.
பிரியா - பிரியா:
`பிரியா' திரைப்படம் சுஜாதா எழுதிய பிரியா நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. ரஜினி, ஸ்ரீதேவி நடிக்கத் தயாரிப்பாளரின் கட்டுப்பாட்டில் இருக்கும் நடிகைக்கு ஏற்படும் சிக்கல்களை வழக்கறிஞர் ஒருவர் எப்படித் தீர்த்து வைக்கிறார் என்பதை மிகவும் விறுவிறுப்பாகப் படமாக்கியிருந்தார் எஸ்.பி.முத்துராமன்.
3 இடியட்ஸ் - நண்பன்:
சேத்தன் பகத் எழுதிய `ஃபைவ் பாயின்ட் சம்ஒன்' என்னும் நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்தியில் வெளிவந்த திரைப்படம் 3 இடியட்ஸ். அதனுடைய ரீமேக்தான் நண்பன். விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடிக்க இந்தியக் கல்வி முறையைப் பற்றிய அவசியமான மெசேஜை மூன்று நண்பர்களின் கல்லூரி வாழ்வின் மூலம் அழகாகப் பதிவு செய்தார் இயக்குநர் ஷங்கர்.
காவல் கோட்டம் - அரவான்:
`அரவான்' திரைப்படத்தின் கதை சு.வெங்கடேசன் எழுதி 2011 ஆண்டுக்கான இந்திய சாகித்திய அகாதமி விருது பெற்ற காவல் கோட்டம் நாவலில் வரும் ஒரு துணைக் கதை ஆகும். ஆதி, தன்ஷிகா நடிக்கக் களவையும் காவலையும் வாழ்க்கை முறையாகக்கொண்ட எளிய மக்களின் கதையாக `அரவானை' தந்தார் இயக்குநர் வசந்தபாலன்.
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் - ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்:
`ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' திரைப்படம் 1971 ல் வெளிவந்த ஜெயகாந்தனின் `ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' என்னும் நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இந்தப் படத்துக்கான வசனங்களையும் ஜெயகாந்தனே எழுதினார். லட்சுமி, ஸ்ரீகாந்த் நடிக்க ஒரு திரைப்படத்துக்கான செயற்கைத்தனம் கொஞ்சம் கூட தலைகாட்டாமல், முழுக்க முழுக்க எதார்த்தமாகப் படத்தை மிக அருமையாகக் கொண்டு சென்றிருப்பார் இயக்குநர் பீம்சிங்.
வசந்தகால குற்றங்கள் - 144:
`144' திரைப்படம் சுஜாதா அவர்கள் எழுதிய `வசந்தகால குற்றங்கள்' என்னும் நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. சிவா, அசோக் செல்வன், ஓவியா நடிக்க மதுரையில் இருக்கும் இரு கிராமங்களுக்கு இடையே தடைப்பட்ட மீன் பிடித்திருவிழாவும், அதையொட்டிய திருட்டுகளையும், புரளிகளையும் பற்றிய படமாக `144'ஐ இயக்கியிருந்தார் இயக்குநர் ஜி. மணிகண்டன்
உச்சி வெயில் - மறுபக்கம்:
`மறுபக்கம்' திரைப்படம் இந்திரா பார்த்தசாரதி எழுதிய `உச்சி வெயில்' என்னும் நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. வேம்பு அய்யர் என்ற கதாபாத்திரத்தில் சிவகுமார் நடிக்க, அகில இந்திய ரீதியில், சிறந்த படம் என்பதற்கான தேசிய விருது (தங்கத்தாமரை) இந்தத் திரைப்படத்துக்குக் கிடைத்தது. நாவலின் ஆசிரியரான இந்திரா பார்த்தசாரதியே இந்தப் படத்தைத் தயாரிக்க சேது மாதவன் இந்தப் படத்தை இயக்கியிருந்தார்.
வெட்டாட்டம் - நோட்டா:
`அர்ஜுன் ரெட்டி' விஜய் தேவரகொண்டா `நோட்டா' வின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். எழுத்தாளர் ஷான் கருப்பசாமியின் `வெட்டாட்டம்' நாவலைத் தழுவி இத்திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், முழுக்க முழுக்க அரசியல் சார்ந்த படமாக உருவாகியிருக்கும் இத்திரைப்படத்துக்கு, ஷான் கருப்பசாமியுடன் இணைந்து படத்துக்கான திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் ஆனந்த் ஷங்கர்.
Thanks
Anandha vikadan
-
MORE CURRENT AFFAIRS VIEW ALL
- TNPSC Current Affairs - 2019