TNPSC Current Affairs : August-28-2020
தற்போதைய செய்திகள்
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு

ஜன் தன் திட்டம் 

 • 2014-ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி அனைவருக்கும் வங்கிக் கணக்கு கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் ஜன் தன் திட்டத்தை அறிமுகம் செய்தார். அதன்படி அந்த ஆண்டு ஆகஸ்ட் 28, 2014-ம் தேதி இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.
 • பிரதமர் ஜன் தன் திட்டத்தில் கூடுதல் வசதிகளைக் கடந்த 2018-ம் ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதன்படி, ஒவ்வொரு வீட்டுக்கும் வங்கிக் கணக்கு என்ற நிலையிலிருந்து, ஒவ்வொரு வங்கிக் கணக்கு இல்லாத வயது வந்தோருக்கும் வங்கிக் கணக்கு என மாற்றியது.
 • உலகத்தின் மிகப்பெரிய நிதி உள்ளிணைத்தல் முயற்சிகளில் ஒன்றான பிரதமரின் ஜன்-தன் திட்டம் (மக்கள் நிதித் திட்டம்) இந்த உறுதியை நோக்கிய ஒரு முக்கிய நடவடிக்கையாகும்.
பெரியாா் விருது, 2020 மா.மீனாட்சிசுந்தரம்
அண்ணா விருது, 2020 பேராசிரியா் அ.ராமசாமி
 • தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பட்டிய லினப் பிரிவினருக்கு வழங்கப் படும் இடஒதுக்கீட்டில், அருந்ததி யினருக்கு 3 சதவீத உள்இடஒதுக் கீடு வழங்குவதற்கான சட்ட முன்வடிவு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது - 2009.
 • Afghanistan Floods News காபூல்: ஆப்கானிஸ்தானின் பல மாநிலங்களில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தால் (Afghanistan Floods) பேரழிவு ஏற்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை 122 பேர் இறந்துள்ளனர் மற்றும் 147 பேர் காயமடைந்தனர்.
 • லடாக்கின் வன்முறைக்கு மூன்று மாதங்களுக்குப் பிறகு சீனாவின் மவுத் பீஸ் குளோபல் டைம்ஸ் (Chinese mouthpiece, Global Times) நடத்திய ஆய்வின்படி, பெரும்பாலான சீனர்கள் தங்கள் தலைவர்களை விட சுமார், 50 சதவீதம் பேர் இந்தியாவின் மோடி அரசாங்கத்தை பாராட்டியுள்ளனர். 
 • முக கவசம் அணியாத பயணிகளை பயண தடை பட்டியலில் வைக்கும்படி விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து பொது இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.
 • திருச்சி ஆயுதப் படையில் காவலராகப் பணியாற்றி வரும் அரவிந்துக்குரத்த தான கொடை வள்ளல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
 • சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ‘கொலின் குளோரைடு’ ரசாயன இறக்குமதிக்கு பொருள் குவிப்பு தடுப்பு வரி விதிக்க வா்த்தகத் தீா்வு பொது இயக்குநரகம் (டிஜிடிஆா்) பரிந்துரைத்துள்ளது.

 

ஃபேபியானா பியர்ரே-லூயிஸ் (39)

 • ஹைதியில் இருந்து அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்து வந்த குடும்பத்தைச் சேர்ந்த பியர்ரே-லூயிஸ்தான், சட்டக்கல்லூரிக்குச் சென்ற முதல் நபர் ஆவார்.
 • நியூ ஜெர்ஸியின் உச்ச நீதிமன்றத்தில் முதல் கறுப்பின பெண் நீதிபதியின் நியமனத்தை மாகாண செனட் அவை உறுதி செய்துள்ளது.

 

 • தில்லியில் கரோனா பரிசோதனகளை இரட்டிப்பாக்க மத்திய சுகாதாரத்துறை அனுமதி அளித்துள்ளதாக தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.
 • உடல்நல பாதிப்பால் அவதிப்பட்டு வரும் ஜப்பான் பிரதமர் சின்சோ அபே  தனது பதவியை ராஜிநாமா செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
 • இஸ்ரேலிடமிருந்து ரூ.7,500 கோடியில் 2 அதிநவீன கண்காணிப்பு கருவிகளை வாங்க இந்தியா முடிவு
 • டிக் டாக் செயலி நிறுவனத்தின் தலைமை நிா்வாக அதிகாரி கெவின் மேயா் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.
 • ‘சுயச்சாா்பு இந்தியா’ திட்டத்தின் மூலம் ராணுவ தளவாடங்கள் துறையில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதே அரசின் இலக்கு என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.
 • ஜப்பானின் நீண்ட கால பிரதமர் - ஷின்ஸோ அபே.
 • கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீடுகளிலேயே மருத்துவக் கண்காணிப்பில் உள்ளவா்களுக்கான ‘அம்மா கோவிட் வீட்டு பராமரிப்புத் திட்டத்தை’ தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக சென்னையில் தொடங்கப்பட்ட இத்திட்டம், தற்போது சேலம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

 

அம்மா கோவிட் ஹோம் கோ்

 • அதன் கீழ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவா்களுக்கு கரோனா சிகிச்சை மற்றும் மருத்துவக் கண்காணிப்புக்கான சிறப்புப் பெட்டகமானது ரூ.2,500-க்கு வழங்கப்படும். அதைத் தவிர மருத்துவ ஆலோசனைகளும்அளிக்கப்படும்.
 • அந்தப் பெட்டகத்தில், உடலில் உள்ள ஆக்சிஜன் அளவு மற்றும் இதயத் துடிப்பைக் கண்டறிவதற்கான பல்ஸ்-ஆக்ஸி மீட்டா், வெப்பநிலையை அறியும் டிஜிட்டல் தொ்மல் மீட்டா் ஆகிய உபகரணங்கள் இருக்கும்.
 • அதனுடன்14 முகக் கவசங்கள், கை கழுவும் சோப்பு ஒன்று, அதிமதுரம் மற்றும் கபசுரக் குடிநீா் பவுடா் பாக்கெட்டுகள், 60 அமுக்ரா சூரணம் மாத்திரைகள், 14 வைட்டமின்-சி மாத்திரைகள், 14 ஜிங்க் மாத்திரைகள், 14 மல்டி வைட்டமின் மாத்திரைகள் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கும். கரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் அடங்கிய கையேடும் அந்த பெட்டகத்தில் இருக்கும்.
 • இதைத் தவிர, ‘அம்மா கோவிட் ஹோம் கோ்’ திட்டத்தில், முழு உடல் பரிசோதனை மைய அலுவா்கள் நாள்தோறும் கரோனா நோயாளிகளுடன் விடியோ அழைப்பில் பேசுவாா்கள். மேலும், மருத்துவா்கள் மற்றும் மனநல ஆலோசகா்களும் காணொலி முறையில் அவா்களுடன் உரையாற்றி நோயாளிகளின் உடல்நிலையையும், உளவியல் நிலையையும் பரிசோதிப்பாா்கள்.
மத்திய நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன்
மத்திய நிதித்துறை இணையமைச்சர்  அனுராக் தாக்கூர்
ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்செயலாளர்  அன்டோனியோ குடெரெஸ்
உலகின் கோடீஸ்வரர் பட்டியலில் முதலிடத்தை பிடித்த அமேசான் நிறுவனர்  ஜெஃப் பெசோஸ்

 

Thanks 

The Hindu, Dinamani,  Dailythanthi 

ஒரே பாரதம் உன்னத பாரதம்
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு
 • ஒரே பாரதம் உன்னத பாரதம்
 • மத்திய சுற்றுலா அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் பணியாற்றி வருகிறது.
 • ஒரே பாரதம் உன்னத பாரதம் என்பது குறித்து பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு 2020 மே 8ஆம்தேதி முதல் 2020 ஆகஸ்ட் 24ஆம்தேதி வரை ஏற்பாடுசெய்திருந்தன.
 • ஒரே பாரதம் உன்னத பாரதம் நிகழ்ச்சிகளின் விவரம் வருமாறு: 2020 மே மாதத்தில் 20 மத்திய ஹோட்டல் மேலாண்மை நிறுவனங்கள், 32 இணைமாநிலங்களில் 6141 பேர் பங்கேற்ற 27 நிகழ்ச்சிகளை நடத்தியது.
 • 2020 ஜூன் மாதத்தில் 20 மத்திய ஹோட்டல் மேலாண்மை நிறுவனங்கள், 26 இணை மாநிலங்களில் 4167 பேர்பங்கேற்ற 52 நிகழ்ச்சிகளை நடத்தியது. 2020 ஜூலை மாதத்தில் 20 மத்திய ஹோட்டல் மேலாண்மை நிறுவனங்கள் 26 இணை மாநிலங்களில் 2966 பேர்பங்கேற்ற 17 நிகழ்ச்சிகளை நடத்தியது.
 • 2020 ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை 20 மத்திய ஹோட்டல் மேலாண்மை நிறுவனங்கள் 26 இணை மாநிலங்களில் 20 நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டிருந்தது. இதுவரை 5 மத்திய ஹோட்டல் மேலாண்மை நிறுவனங்கள் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளன.
 • அவற்றின் அறிக்கைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
 • 15 நிறுவனங்களுக்கான நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன.
 • இந்தியச்சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை நிறுவனம் "ஒரேபாரதம் உன்னத பாரதம்" திட்டத்தின் கீழ் "ஆன்லைன் தேசியகவிதை மற்றும் வாசிப்புப்போட்டிகளுக்கு " ஏற்பாடு செய்திருந்தது. இதற்கான பதிவுகள் நாடெங்கும் தொடங்கப்பட்டன.