TNPSC Current Affairs : August-24-2020
ஓட்டுனர் உரிமம்
மாநிலங்களின் சுயவிவரம்

 

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகமானது நாடு முழுவதும் வாகன உறுதிச் சான்றிதழ்கள், உரிமைச் சான்றிதழ்கள், அனுமதிச் சான்றிதழ்கள், பதிவுச் சான்றிதழ்கள் மற்றும் வாகனங்கள் தொடர்பான அனைத்து வகையான ஆவணங்களின் செல்லுபடித் தேதியை டிசம்பர் 30 வரை நீட்டிப்பது என்று முடிவெடுத்துள்ளது .

 

அரசு அறிவுறுத்தல்:

பொதுமுடக்கத்தின் காரணமாக நீட்டிக்க முடியாத இவ்வகையான அனைத்து ஆவணங்கள் மற்றும் பிப்ரவரி 1, 2020 துவங்கி டிசம்பர் 30, 2020 வரை காலாவதியாகும் ஆவணங்கள் என அனைத்தும் டிசம்பர் 31 வரை செல்லுபடியாகும் எனக் கருத வேண்டும் என்று அலுவலர்களுக்கு துறை அறிவுறுத்தியுள்ளது.

செப்டம்பர் 30, 2020

முன்னதாக இத்தகைய ஆவணங்களின் செல்லும் தன்மை செப்டம்பர் 30, 2020 வரை நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தியா-உஸ்பெகிஸ்தான்
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு

முதல் கூட்டம்:

  1. இந்தியா-உஸ்பெகிஸ்தான் நாடுகளின் முதல் தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று இணையவழியாக நடைபெற்றது.
  2. முதலாவது தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் உஸ்பெகிஸ்தான் துணைப் பிரதமர் சர்தோர் உமுர்சகோவ் உடனான சந்திப்பு மிகவும் திருப்திகரமாக அமைந்தது.

ஆலோசனை:

  1. இக்கூட்டத்தில் இரு நாடுகள் இடையேயான வர்த்தகம், முதலீடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
  2. இதன்மூலம், இந்தியா-உஸ்பெகிஸ்தான் இடையேயான உறவு மேலும் வலுவடையும் என கூறினார்.

300 மில்லியன் டாலர்

  1. இந்தியா மற்றும் உஸ்பெகிஸ்தான் இடையே 300 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் வர்த்தக வருவாயைக் கொண்டுள்ளது.
  2. இந்தியாவின் வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகிய இரண்டிலும் மருந்துவத்துறை ஒரு முக்கிய பங்களிப்பாகும்.
  3. உஸ்பெகிஸ்தானில் முக்கிய இந்திய முதலீடுகளாக மருந்து, கேளிக்கை பூங்காக்கள், ஆட்டோமொபைல் ஆகிய துறைகள் சார்ந்து உள்ளது.
இஸ்ரேலில் 1100 ஆண்டுகளுக்கு முன்பு புதைத்து வைக்கப்பட்டிருந்த தங்க நாணயங்கள்
முக்கிய நபர்கள் மற்றும் செய்திகளில் இடங்கள்

1100 ஆண்டுகள்

இஸ்ரேலில் 1100 ஆண்டுகளுக்கு முன்பு புதைத்து வைக்கப்பட்டிருந்த தங்க நாணயங்கள் அடங்கிய களிமண் பானையை கண்டுபிடித்த உள்ளூர் இளைஞர்கள் அதனை தொல்பொருள் துறையிடம் ஒப்படைத்தனர்.

ஒன்பதாம் நூற்றாண்டு கால பொருட்கள்:

ஒன்பதாம் நூற்றாண்டின் அப்பாஸிட் கலிபா காலத்திற்கு முந்தைய 24 காரட் 425 தூய தங்க நாணயங்கள் அந்த நேரத்தில் கணிசமான தொகையாக இருந்திருக்கும் என்று தொல்பொருள் ஆணையத்தின் நாணய நிபுணர்கள் தெரிவித்தனர்.

இந்தியாவின் மிக நீளமான நதி ரோப்வே திங்கள்கிழமை திறக்கப்பட்டது.
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு

இந்தியாவின் மிக நீளமான நதி ரோப்வே திறப்பு:

  • அசாம் மாநிலத்தில் குவஹாத்தி மற்றும் வடக்கு குவஹாத்தியை இணைக்கும் இந்தியாவின் மிக நீளமான நதி ரோப்வே திறக்கப்பட்டது.
  • அசாம் மாநிலத்தில் குவஹாத்தியின் கச்சாரி காட்டில் இருந்து வடக்கு குவஹாத்தியில் உள்ள டவுல் கோவிந்தா கோயில் வரை இந்த ரோப்வே சேவை இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • பிரம்மபுத்ரா நதியில் 1.8 கி.மீ நீளமுள்ள ரோப்வே, எட்டு நிமிட நேரத்தில் தனது பயண தூரத்தை அடையும் எனவும் தற்போது கரோனா தொற்று காரணமாக 15 பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுப் பாலினத்தவர்களுக்கான தேசியக் கவுன்சில்
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு

 

மத்திய அரசு மாற்றுப் பாலினத்தவர்களுக்கான தேசியக் கவுன்சில்:

தேசிய ஆணையம் உருவாக்கம்

 

  • மாற்றுப் பாலினத்தவர் (உரிமைகளைப் பாதுகாத்தல்) சட்டம் 2019 இன் (2019 இன் 40 வது சட்டம்) பிரிவு 16இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி மத்திய அரசு 21 ஆகஸ்ட் 2020 தேதியிட்ட அறிவிக்கையின்படி மாற்றுப் பாலினத்தவர்களுக்கான தேசியக் கவுன்சிலை உருவாக்கியுள்ளது.
  • மத்திய சமூக நீதி, அதிகாரம் அளித்தல் அமைச்சர் இந்தக் கவுன்சிலின் தலைவராக (அலுவல் சாராது) இருப்பார்.
  • அதேபோன்று சமூக நீதி, அதிகாரம் அளித்தல் இணையமைச்சர் துணைத்தலைவராக (அலுவல் சாராது) இருப்பார்.
  • இந்த தேசியக் கவுன்சிலானது கீழ்கண்ட செயல்பாடுகளை மேற்கொள்ளும்:
  1. மாற்றுப் பாலினத்தவர்கள் தொடர்பாக கொள்கைகள், நிகழ்ச்சிகள், சட்டங்கள் மற்றும் செயல்திட்டங்களை வகுப்பதற்கு மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்குதல்,
  2. மாற்றுப் பாலினத்தவருக்கு சமநிலை மற்றும் முழுபங்கேற்பு கிடைப்பதற்காக வகுக்கப்பட்டுள்ள கொள்கைகள் மற்றும் செயல்திட்டங்களின் தாக்கத்தை கண்காணித்தல் மற்றும் மதிப்பீடு செய்தல்,
  3. மாற்றுப் பாலினத்தவர் தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டுள்ள அனைத்து அரசுத்துறைகள் மற்றும் அரசு, அரசு சாராத நிறுவனங்கள் ஆகியவற்றின் நடவடிக்கைகளை மீளாய்வு செய்தல் மற்றும் ஒருங்கிணைத்தல்
  4. மாற்றுப் பாலினத்தவரின் குறைகளைத் தீர்த்து வைத்தல்
  5. மத்திய அரசு பரிந்துரைக்கின்ற இத்தகைய ஏனைய செயல்களை நிறைவேற்றுதல் பல்வேறு அமைச்சகங்கள் / துறைகளின் பிரதிநிதிகள், மாற்று பாலினச் சமூதாயத்தினரின் 5 பிரதிநிதிகள், தேசிய மனித உரிமைகள் ஆணையம் மற்றும் தேசியப் பெண்கள் ஆணையத்தின் பிரதிநிதிகள், மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நிபுணர்கள் ஆகியோர் கவுன்சிலின் மற்ற உறுப்பினர்களாக இருப்பார்கள்.
  6. அலுவல் சாராத உறுப்பினர்களைத் தவிர தேசியக் கவுன்சில் உறுப்பினர் ஒருவர் பொறுப்பேற்றதில் இருந்து 3 ஆண்டு காலத்திற்கு பதவியில் இருப்பார்.
தூய்மை கணக்கெடுப்பு 2020
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு

தூய்மை நகரம் பற்றிய கண்ணோட்டம்:

இந்தியாவின் தூய்மை நகரங்களுக்கான பட்டியலில், தொடா்ந்து 4-ஆவது முறையாக, மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூா் நகரம் முதலிடம் பிடித்துள்ளது.

  • குஜராத்தின் சூரத் நகரம் இரண்டாவது இடத்தையும்,
  • மகாராஷ்டிரத்தின் நவி மும்பை நகரம் 3-ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.

 

  • தூய்மையான இந்தியாவை கட்டமைப்பதற்காக, தூய்மையைப் பேணும் நகரங்கள், மாநிலங்கள், தலைநகரங்களைத் தோ்ந்தெடுத்து மத்திய வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் விருதுகள் வழங்கி வருகிறது.

 

அந்த வகையில் 5-ஆவது ஆண்டுக்கான தூய்மையான நகரங்களின் பட்டியலை மத்திய வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி, தில்லியில் வியாழக்கிழமை அறிவித்தாா்.

 

  • நாட்டில் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட தூய்மையான நகரங்களின் பட்டியலில் இந்தூா் முதலிடத்தையும், சூரத், நவி மும்பை முறையே இரண்டாவது, மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.
  • கங்கை நதியை ஒட்டியுள்ள தூய்மையான சிறு நகரங்களில், பிரதமா் நரேந்திர மோடியின் தொகுதியான வாராணசி முதலிடம் பிடித்துள்ளது.
  • கான்பூா், முங்கோ், பிரயாக்ராஜ், ஹரித்வாா் ஆகியவை அடுத்தடுத்த இடத்தைப் பிடித்துள்ளன.
  • 100-க்கும் மேற்பட்ட நகா்ப்புற உள்ளாட்சிகளைக் கொண்ட மாநிலங்களின் வரிசையில், சத்தீஸ்கா் மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது.
  • இரண்டாவது இடத்தை மகாராஷ்டிரமும், மூன்றாவது இடத்தை மத்திய பிரதேசமும் பிடித்துள்ளன.
  • 100-க்கும் குறைவான நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளைக் கொண்ட மாநிலங்களின் வரிசையில் ஜாா்க்கண்ட் முதலிடத்திலும், ஹரியாணா, உத்தரகண்ட், சிக்கிம், அஸ்ஸாம், ஹிமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களையும் பிடித்துள்ளன.
  • 10 லட்சத்துக்கும் குறைவாக மக்கள்தொகை உள்ள நகரங்களில், சத்தீஸ்கரின் அம்பிகாபூா் தூய்மையான நகரமாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • இரண்டாவது இடத்தில் கா்நாடகத்தின் மைசூரும், மூன்றாவது இடத்தில் புதுதில்லி மாநகராட்சி பகுதியும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
  • சிறந்த பெரிய நகரமாக, கிரேட்டா் ஹைதராபாத் தோ்ந்தெடுக்கப்பட்டது.
  • ராணுவக் குடியிருப்புகளில், ஜலந்தா் ராணுவக் குடியிருப்பு முதலிடத்தையும், தில்லி, மீரட் ராணுவக் குடியிருப்புகள் அடுத்தடுத்த இடங்களையும் பிடித்துள்ளன.
  • 2020-ஆம் ஆண்டுக்கான தூய்மை நகரங்களைத் தோ்வு செய்வதற்காக, இதுவரை இல்லாத அளவில், 4,242 நகரங்கள், 62 ராணுவக் குடியிருப்புகள், கங்கை நதியை ஒட்டியுள்ள 92 சிறு நகரங்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
  • சமூக ஊடகங்களில் 11 கோடி பேரும், பிரத்யேக செயலியில் 1.7 கோடி பேரும் கருத்துகளைத் தெரிவித்தனா்.
  • இதனால் 28 நாள்களில் கணக்கெடுப்பு முடிக்கப்பட்டது.
இந்தியாவின் மிக உயரமான ரயில் பாலம்
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு

ஆகஸ்ட் 2022-க்குள் மிக உயர்ந்த ரயில் பாலம் கட்டுமானத்தை இந்தியா முடிக்க உள்ளது.

 

  • ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் விரைவில் உலகின் மிக உயர்ந்த ரயில் பாலம் கொண்டு வரவுள்ளது.
  • இது ஈபிள் கோபுரத்தை விட 35 மீட்டர் உயரத்தில் இருக்கும்.
  • செனாப் ஆற்றின் மீது கட்டப்பட்டு வரும் இந்த பாலம் ஆகஸ்ட் 2022-க்குள் கட்டி முடிக்கப்படும்.
  • இந்த பாலம் காஷ்மீர் பள்ளத்தாக்கை ஜம்மு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் கத்ராவுடன் இணைக்கும்.
  • இது கத்ராவிலிருந்து ஸ்ரீநகர் செல்லும் பயண நேரத்தை 5-6 மணி நேரம் குறைக்கும்.
  • வைஷ்ணோ தேவி சன்னதிக்கு புகழ்பெற்ற J&K மாவட்டத்தின் ரியாசி மாவட்டம், மிக உயர்ந்த ரயில்வே பாலம் திட்டத்துடன் சுற்றுலாவில் பெரும் முன்னேற்றம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.