TNPSC Current Affairs : August-22-2020
ஸ்ரீசைலம் நீர்மின் நிலையத்தில் தீவிபத்து:
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு
  • தெலங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் நீர்மின் உற்பத்தி நிலையத்தில் உள்ள நான்காவது யூனிட்டில் தீ விபத்து ஏற்பட்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
  • விபத்து நடந்தபோது நான்காவது யூனிட்டில் 19 ஊழியர்கள் பணியில் இருந்தனர்.
  • அவர்களில் 10 பேர் சுரங்கப்பாதை வழியாக வெளியேறி தப்பினார்.
  • அதில் 6 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
  • எஞ்சிய 9 பேரை தேடும்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
  • சிங்கரேனி நிலக்கரி சுரங்கத்திலிருந்து பாதுகாப்பு ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு சிக்கிக்கொண்ட 9 பேரையும் தேடிக்கண்டுபிடிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.