TNPSC Current Affairs : August-07-2020
தேசிய சுகாதார திட்டம்
நலன்புரி சார்ந்த அரசு திட்டங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடு

தேசிய சுகாதார திட்டம்

குறிக்கோள்கள்

 1. குழந்தைகள் மற்றும் கர்ப்பவதிகளின் இறப்பு விகிதத்தைக் குறைத்தல்;
 2. பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம், நீர், கழிப்பிடம் மற்றும் சுகாதார வசதி, தடுப்பூசி மற்றும் சத்துணவு ஆகியன போன்ற மக்களுக்குத் தேவைப்படும் சுகாதார வசதிகளை எளிதில் கிடைக்குமாறு செய்தல்;
 3. உள்ளூரிலேயே பரவக்கூடிய நோய்கள் உட்பட அனத்து விதமான தொற்றக்கூடிய மற்றும் தொற்றாத நோய்களை முன்னரே தடுப்பதுடன் அவைகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருத்தல்;
 4. ஒருங்கிணைந்த, அனைத்து வசதிகளுடன் கூடிய ஆரம்ப சுகாதார வசதிகள் அனைவருக்கும் கிடைக்குமாறு பார்த்துக்கொள்ளுதல்;
 5. மக்கள்தொகை நிலைப்பாடு, பாலின மற்றும் அமைவிடச் சமன்பாடு;
 6. உள்ளூர் சுகாதாரப் பண்பாடுகளைப் புதுப்பிப்பதுடன் "ஆயுஷ்' திட்டத்தை நெறிப்படுத்துதல்;
 7. சுகாதாரமான வாழ்க்கை முறைகளை மேம்படுத்துதல்
இந்திரதனுஷ் தடுப்பூசிகள் திட்டம்
நலன்புரி சார்ந்த அரசு திட்டங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடு

இந்திய அரசாங்கத்தின் ஆரோக்கியம் மற்றும் குடும்பநல அமைச்சகம் 2014, டிசம்பர் 25 ஆம் நாள் தடுப்பூசிகள் திட்டத்தை கொண்டு வந்தது.

 

நோக்கம்

கக்குவான், ரனஜன்னி, டெட்டனஸ், இளம்பிள்ளைவாதம், காசநோய், மீசல்ஸ், டீவகை மஞ்சள் காமாலை ஆகியவையை தடுக்ககூடிய 7 வகை நோய்களுக்கு அரைகுறையாக தடுப்பூசி போடப்படுபவர்களும் இந்தத் திட்டத்தின்படி அனைத்து தடுப்பூசிகளையும் பெறுவார்கள்.

பிரதான மந்திரி சுரக்ஷித் மத்ரித்வ அபியான்
நலன்புரி சார்ந்த அரசு திட்டங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடு

பத்தாயிரம் ஆண்டில் சர்வதேச அரங்கில் ஒப்புக்கொள்ளப்பட்ட நிலை பெறுவளர்ச்சி இலக்குகளை எட்ட இந்தியா முயன்று வருகிற வேளையில், 2015 ஆம் ஆண்டுக்குப் பிந்தைய காலகட்டத்தில், பிள்ளைப்பேற்றின் போது தாய்மார்கள் உயிரிழப்பதைக் குறைக்கும் பணி முக்கியத்துவம் பெறுகிறது. ஒவ்வொரு கர்ப்பமும் தனித்துவமானது. எனவே, கருவுற்ற ஒவ்வொரு தாய்க்கும் சிறப்புக்கவனம் தேவை. முன்கூட்டிய அறிகுறிகள் தோன்றியும் அல்லது தோன்றாமலும், உயிருக்கு ஆபத்தான நிலை கருவுற்ற பெண்களுக்கு ஏற்படலாம். எனவே பிள்ளைப் பேற்றின் போது உயிராபத்தான சிக்கல்கள் ஏற்படாமல் தடுக்க கருவுற்ற ஒவ்வொரு தாய்க்கும் தரமான மருத்துவ சேவை அளிக்க வேண்டும்.

இந்தியாவில் மின்னாட்சி
நலன்புரி சார்ந்த அரசு திட்டங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடு

தேசிய மின்னாட்சி திட்டம்

 • தகவல்தொடர்பு தொழில்நுட்பத்தின் (Information and Communication Technology -ICT) பயன்களை கடைசி குடிமகனுக்கும் எடுத்துச்செல்வதால், வெளிப்படைத்தன்மையான, உரிய நேரத்தில் மற்றும் தடையற்ற பொதுமக்கள் சேவையை வழங்கும் பொருட்டு, 1990-களின் இறுதி வாக்கில் இந்திய அரசு மின்-ஆளுமை திட்டங்களைத் துவக்கியது.
 • இதன் பிறகு, நாட்டில் மின்-ஆளுமை திட்டங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலான இலக்கு சார்ந்த திட்டங்கள் (Mission Mode Projects - MMPs) மற்றும் அதன் பகுதிகளையும் உள்ளடக்கிய தேசிய மின்-ஆளுமை திட்டத்திற்கு (National e-Governance Plan - NeGP) மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
 • மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (Department of Electronics and Information Technology - DeitY), நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறை தீர்க்கும் துறைகள் (Department of Administrative Reforms and Public Grievances -DAR&PG) ஆகியவை இந்த தேசிய மின்-ஆளுமை திட்டத்தை வகுத்துள்ளன.
 • "பொதுச்சேவை மையங்கள் மூலம், சாதாரண மக்களுக்கு அவர்களின் வாழுமிட பகுதிகளில் அனைத்து சேவைகளும் கிடைக்கச் செய்தல், குறைந்த விலையில் தங்களுக்கு தேவையான அடிப்படைச் சேவைகள் பெறுவதை உறுதி செய்தல் மற்றும் அவ்வாறான சேவைகளின் திறன், வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றை அதிகரித்தல்" நல்ல ஆளுமை அளிக்கும் அரசின் நோக்கத்தை, இந்த தொலைநோக்கு பிரதிபலிக்கிறது.

 

அணுகும் தன்மை: :

 • கிராமப்புற மக்களை மனதில் வைத்தே இந்த தொலைநோக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.
 • தொலை தூரம் மற்றும் அறியாமை ஆகிய காரணங்களால், அரசின் சேவைகளைப் பெற முடியாமல் இருக்கும் சமுதாயத்தின் பிரிவுகளை அடைவதே இதன் நோக்கமாகும்.
 • கிராமப்புற குடிமக்கள் எளிதில் அணுகும் பொருட்டு, பொதுச்சேவை மையங்களை (Common Service Centres - CSCs), ஒன்றிய அளவிலான அரசு அலுவலகங்களுடன் (government offices upto the block level) இணைக்கும் மாநில அளவிலான அகன்ற பகுதி வலைப்பின்னல் (State Wide Area Network - SWAN) வசதியும் இந்த தேசிய மின்-ஆளுமை திட்டத்தின் கீழ் அளிக்கப்பட்டுள்ளது.

 

 

பொதுச்சேவை வழங்கும் மையங்கள் :

 

 • ஒரு அரசுத் துறை அல்லது அதன் பகுதி அலுவலகங்களின் சேவைகளைப் பெற, தற்போது ஒதுக்குப்புற பகுதிகளில் வசிக்கும் கிராமப்புற மக்கள் அதிக தொலைவு பயணம் செய்ய வேண்டியிருக்கிறது.
 • பொதுமக்களுக்கான சேவைகளை சாதாரண குடிமக்கள் பெறுவதற்கு, இதனால் அதிக நேர விரயமும் பொருட் செலவும் ஏற்படுகிறது.
 • இதனை தவிர்க்கும் பொருட்டு, தேசிய மின்-ஆளுமை திட்ட தொலைநோக்கின் ஒரு பகுதியாக, இணைய வசதி கொண்ட கணினியுடன் பொதுச்சேவை மையங்களை ஒவ்வொரு ஆறு கிராமங்களிலும், கிராம மக்கள் எளிதில் சேவைகள் பெறும் வகையில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
 • இந்த பொதுச்சேவை மையங்கள் மூலம், இணையவழியில் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் இருந்து ஒருங்கிணைந்த சேவைகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

ஆளுமையை மேம்படுத்த, மின்-ஆளுமையை கடைப்பிடித்தல் :

 

 • தகவல்தொடர்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம், அரசால் குடிமக்களை எளிதில் அணுக மற்றும் ஆளுமையை மேம்படுத்த முடியும்.
 • இதன் மூலம், திட்டச் செயல்பாடுகளை மேற்கொள்ளவும் அவற்றை சிறப்பாக கண்காணிக்கவும் இயலுமாதலால், ஆளுமையின் நம்பகத்தன்மையும் வெளிப்படைத்தன்மையும் அதிகரிக்கும்.
 • குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் : குடிமக்கள் தேவை சார்ந்த சேவைகளை சரியான விலையில் வழங்குவதன் மூலம் பயன்பாட்டு சுழற்சியை அதிகரிக்கவும், சேவைகளை கேட்டுப் பெறவும் முடியுமாதலால், மின்-ஆளுமை மூலம் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்தை நிறைவேற்ற உதவும்.
 • அரசு ஆளுமையை மின்னணு முறைகளை பயன்படுத்தி பலப்படுத்துவதே இத்திட்டத்தின் தொலைநோக்காகும்.
 • மின்-ஆளுமை திட்டங்கள் மூலம் வழங்கப்படும் சேவைகள், மத்திய மற்றும் மாநில அளவில் இதுவரை சென்றடையாத மக்கள் பிரிவை அடைய உதவுவதால், அவர்கள் சுய பலமடையவும் அரசு முயற்சிகளில் அதிக பங்கெடுக்கவும் இயலும். இதனால் வறுமை ஒழிப்புக்கும், மக்களிடையே நிலவும் சமூக மற்றும் பொருளாதார இடைவெளியை நிரப்புவதற்கும் உதவும்.
 • தேசிய மின்-ஆளுமை திட்டத்தை செயல்படுத்தும் யுக்திகள் தேசிய மின்-ஆளுமை திட்டத்தை செயல்படுத்த, தேசிய மற்றும் சர்வதேச அளவில் செயல்படுத்தப்பட்ட மின்-ஆளுமை திட்டங்களின் அனுபங்கள் அடிப்படையில், செயலறிவுத்திறம் வாய்ந்த அணுகுமுறைகள் திட்டமிடப்படுகின்றன.
 • தேசிய மின்-ஆளுமை திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்படும் அணுகுமுறையில், கீழ்கண்ட கூறுகள் காணப்படுகின்றன:

 

பொது கட்டமைப்பு :

 • மாநில அளவிலான அகன்ற வலைப்பின்னல் (State Wide Area Networks - SWANs), மாநில புள்ளிவிபர மையங்கள் (State Data Centres - SDCs), பொதுச்சேவை மையங்கள் (Common Services Centres - CSCs), மின்னணு சேவை வழங்கும் மையங்கள் (Electronic Service Delivery Gateways) போன்ற பொதுவான தகவல் தொழில்நுட்ப கட்டமைப்புகள், தேசிய மின்-ஆளுமை திட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்படும்.

 

ஆளுமை:

 

 • தேசிய மின்-ஆளுமை திட்ட செயலாக்கத்தை ஒருங்கிணைக்கவும், கண்காணிக்கவும் தேவையான அதிகார ஆணையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
 • தரநிலைகள் மற்றும் கொள்கை வழிகாட்டிகளை ஏற்படுத்துதல், தொழில்நுட்ப உதவி அளித்தல், திறன் வளர்த்தல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு போன்றவையும் இத்திட்டத்தின் கீழ் செய்யப்படும்.
 • தகவல் தொழில்நுட்பத்துறை (Department of Information Technology - DIT) தன்னை மட்டுமல்லாமல், தேசிய தகவல் மையம் (National Informatics Centre - NIC), தரநிலைபடுத்துதல்-பரிசோதனை-தரச்சான்றிதழ் துறை (Standardization, Testing and Quality Certification - STQC), முன்னோக்கிய கணினியியல் மேம்பாட்டு மையம் (Centre for Development of Advanced Computing - C-DAC), சிறந்த ஆளுமைக்கான தேசிய நிறுவனம் (National Institute for Smart Governance - NISG) போன்ற பிற நிறுவனங்களையும் பலப்படுத்திக் கொள்கிறது.

 

ஒருங்கிணைந்த முயற்சிகள், பரவலாக்கப்பட்ட செயலாக்கம்:

 • பொதுமக்கள் தேவை சார்ந்த செயலாக்கம், வெவ்வேறு மின்-ஆளுமை திட்டங்களை ஒருங்கிணைத்தல், தகவல் தொழில்நுட்பங்கள் மற்றும் வளங்களை போதிய அளவில் பயன்படுத்துதல் ஆகியவற்றில் கூடிய வரை ஒருங்கிணைந்த முயற்சிகள் இருந்தாலும், அதன் செயலாக்கம் பரவலாக்கப்பட்ட முறையில் இருக்கும்.
 • வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட திட்டங்களை தேர்ந்தெடுத்து, அவற்றில் தேவையான மாற்றங்களை செய்து பயன்படுத்தும் திட்டமும் பரிசீலிக்கப்படுகிறது.

 

பொது மற்றும் தனியார்த்துறை கூட்டுச் செயல்பாடு மாதிரிகள் :

 

 • பாதுகாப்பு அம்சங்களில் பாதகம் ஏற்படாத வகையில், வளங்களை அதிகரிக்க இவ்வகை கூட்டுச் செயல்பாடுகளை ஏற்படுத்த வேண்டும்.

 

கூறுகளை ஒருங்கிணைத்தல் :

 

 • ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும், தெளிவின்மையை தவிர்க்கும் பொருட்டு, குடிமக்கள், தொழிலகங்கள் மற்றும் சொத்துக்களுக்கு சிறப்பு குறியீடுகளை பயன்படுத்துதல்.
 • தேசிய மின்-ஆளுமை திட்ட செயலாக்க வடிவமைப்பு தேசிய மின்-ஆளுமை திட்டத்தை செயல்படுத்துவதில் ஈடுபடும் பல்வேறு அமைப்புகளை தேசிய அளவில் ஒருங்கிணைக்க வேண்டியிருப்பதால், அனைத்து அமைப்புகளின் பொறுப்புகளை தெளிவாக வரையறுக்கவும், அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்ட செயலாக்க வடிவத்தை அமல்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
 • இந்த செயல் வடிவத்தின் கூறுகள் மற்றும் அவற்றின் விபரங்கள், படத்தில் தரப்பட்டுள்ளன.
 • சேவை வழங்குவதில் கடைபிடிக்கப்படும் உத்திகள் தடையற்ற ஒரு சாளர முறையில் சேவைகளை பொதுமக்களுக்கு வழங்கும் வகையிலான, மாநில அகன்ற வலைப்பின்னல் (State Wide Area Networks - SWANs), மாநில புள்ளிவிபர மையங்கள் (State Data Centres - SDCs), தேசிய மற்றும் மாநில சேவை வழங்கும் மையங்கள் (National/State Service Delivery Gateway (NSDG/SSDG), மாநில இணையதளங்கள் மற்றும் பொதுச்சேவை மையங்கள் (State Portal and Common Services Centre - CSC) ஆகியவை உள்ளடங்கிய ஒரு பொதுவான மின்னணு சேவையளிக்கும் கட்டமைப்பு, ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் ஏற்படுத்தப்படும்.
 • தேசிய மின்-ஆளுமைப் பிரிவு தேசிய மின்-ஆளுமை திட்டத்தை செயல்படுத்த தகவல் தொழில்நுட்பத்துறைக்கு உதவும் வகையில், இந்திய அரசின் தகவல் பரிமாற்றம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ், மீடியா லேப் ஆசியா அமைப்பிற்குட்பட்டு, தேசிய மின்-ஆளுமை பிரிவு ஒரு சுயசார்பு வர்த்தக பிரிவாக உண்டாக்கப்பட்டுள்ளது. தேசிய மின்-ஆளுமை திட்டம், தகவல் தொழில்நுட்பத்துறைக்கு கீழ்கண்ட வழிகளில் உதவுகிறது: மாநில அரசுகள், அரசுத் துறைகள் ஆகியவை இலக்கு சார்ந்த திட்டங்களை செயல்படுத்துவதில் உறுதுணை மத்திய அமைச்சகங்கள், மாநில அரசுத்துறைகள் ஆகியவற்றுக்கு தொழில்நுட்ப உதவி தேசிய மின்-ஆளுமை திட்டங்களை தொழிநுட்பரீதியாக ஆய்வு செய்யும் உயர்மட்ட கமிட்டிக்கு செயலராக இருத்தல் தேசிய மின்-ஆளுமை திட்டத்தை செயல்படுத்த, மாநில அரசுகளுக்கு மாநில மின்னணு-திட்ட குழுக்களை அளிப்பது.
 • திறன் வளர்த்தல் 20 மத்திய அரசுத்துறைகள், 35 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள், இவற்றில் அடங்கிய 360 துறைகள் மற்றும் 500 செயலாக்க அலகுகள் ஆகியவை உள்ளடங்கிய தேசிய மின்-ஆளுமை திட்டம், மிகப்பெரிய மற்றும் சிக்கலான அம்சங்களையுடையது.
 • அனைத்தும் சேர்த்து 70,000 மனித வருடங்கள் தேவைப்படும் முயற்சியாகும்.
 • தேசிய மின்-ஆளுமை திட்டம் குறிக்கோளை அடைய வேண்டுமானால், வல்லுனர்களை ஈடுபடுத்துதல், திறன்களை மேம்படுத்துதல், பயிற்சியளித்தல் போன்ற திறன் இடைவெளிகளை நிரப்ப வேண்டும். மாநில மின்-ஆளுமை திட்டக் குழுக்கள் (State e-Governance Mission Teams - SeMT), மின்-ஆளுமை திட்டக் குழுக்கள் (Project e-Governance Mission Teams - PeMT) மற்றும் மனித வள மேம்பாடு ஆகியவற்றை உண்டாக்குவதன் மூலம், இடைவெளிகளை நிரப்புவதே திறன் வளர்த்தல் ஆகும்.
 • பங்கேற்பாளர்களை பட்டியலிடுவது, மாநிலங்களுக்கு உறுதுணையாக இருப்பது, வழிகாட்டுவது, தேசிய மின்-ஆளுமை திட்டச் செயல்படுத்தலில் பல்வேறு மட்டங்களில் ஈடுபடும் தலைவர்கள்/அதிகாரிகளை கூர்படுத்துவது, மாநில மின்-ஆளுமை திட்டக்குழுக்களுக்கு வழிகாட்டுவது, ஒருங்கிணைந்த பாடத்திட்டங்களை பயன்படுத்தி சிறப்பு பயிற்சிகள் அளிப்பது, திட்ட அளவில் செயல்படும் அதிகாரிகளுக்கான தகவல் ஒருங்கிணைப்பு ஆகியவற்றை முன்னெடுத்து செயல்படுத்துவதும், இத்திட்டத்தின் நோக்கங்களாகும்.
Books and Authors 2020
புத்தகங்கள் மற்றும் ஆசிரியர்கள்

பிரபலமான புத்தகங்களும் அவற்றின் ஆசிரியரும் இப்போது ஒவ்வொரு தேர்விலும் ஒரு பகுதியாக உள்ளது. முக்கியமாக அரசு தேர்வுகளுக்கு, முக்கியமான புத்தகங்கள் மற்றும் அவற்றின் ஆசிரியர்கள் கேள்விகள் கேட்க வாய்ப்புள்ளது.

ஆர்.ஆர்.பி, வங்கி தேர்வுகள், யு.பி.எஸ்.சி, ஐ.பி.பி.எஸ், எஸ்.எஸ்.சி போன்ற அரசு தேர்வுகள் பொது விழிப்புணர்வு பிரிவில் புத்தகங்கள் மற்றும் ஆசிரியர்களிடமிருந்து இரண்டு அல்லது மூன்று கேள்விகள் கேட்கப்படும் தேர்வாகும்.

புத்தகங்கள் மற்றும் ஆசிரியர்கள் 2020

1. அபூர்வா குமார் சிங் _ ஒரு வர்ணனை மற்றும் டை ஜஸ்ட் ஆன் தி ஏர், சட்டம் 1981.

2.அபய் கே. - தி ப்ளூம்ஸ்பரி ஆந்தாலஜி ஆஃப் கிரேட் இந்திய கவிதைகள்.

3.அமித் ஷா - கர்மயோத கிரந்த்.

பிரதீப் குமார் ஜோஷி
முக்கிய நபர்கள் மற்றும் செய்திகளில் இடங்கள்

கல்வியாளர் பேரா.பிரதீப் குமார் ஜோஷி வெள்ளிக்கிழமை குடிமைப் பணி தேர்வு ஆணையத்தின் (யுபிஎஸ்சி) தலைவராக நியமிக்கப்பட்டார்.

பிரதீப் குமார்
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சமீபத்திய கண்டுபிடிப்புகள்

உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை ஆகஸ்ட் 12 ஆம் தேதி பதிவு செய்ய இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

தூய்மை இந்தியா
பொது விழிப்புணர்வு மற்றும் பொது நிர்வாகம்

மகாத்மா காந்தியின் சுத்தமான இந்தியா எனும் கனவை நிறைவேற்றும் வகையில் கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி பிரதமர் மோடி தூய்மை இந்தியா திட்டத்தை அறிமுகம் செய்தார்.

மனோஜ் சின்ஹா
முக்கிய நபர்கள் மற்றும் செய்திகளில் இடங்கள்

ஜம்மு-காஷ்மீரின் துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா பதவியேற்றுக்கொண்டார்.