TNPSC Current Affairs : August-06-2020
அமோனியம் நைட்ரேட்
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சமீபத்திய கண்டுபிடிப்புகள்

அமோனியம் நைட்ரேட் என்றால் என்ன? அதன் பயன்பாடுகள் என்ன?

 

நைட்ரேட் என்றால் என்ன ?

அது ஏன் ஆபத்தானதாக அறியப்படுகிறது என்ற விவரத்தை காணலாம்.

 • அமோனியம் நைட்ரேட் உரங்கள் தயாரிக்கவே அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது. 
 • மிகவும் குறைந்த விலையில் கிடைக்கக் கூடிய அமில பொருள் என இது கூறப்படுகிறது. 
 • வேதியியல் பெயரில் NH4NO3 என்று அழைக்கப்படும் அம்மோனியம் நைட்ரேட் இயற்கையாக கிடைக்கக் கூடியதாகும்.
 • இது அம்மோனியம் நேர்மின் அயனின் நைட்ரேட் உப்பாகி ஒரு வேதி சேர்மத்தில் உருவாகிறது.
 • இது நீரில் எளிதில் கரையக் கூடிய தன்மைக் கொண்டுள்ளது.
 • பல்வேறு பயன்பாடுகளுக்காக செயற்கையாகவும் அமோனியம் நைட்ரேட் உருவாக்கப்படுகிறது.

 

வெடிக்க காரணம் என்ன?

 • பயிர்கள் செழித்து வளர அமோனியம் நைட்ரேட் உரப்பொருளாக பயன்படுத்தப்படும் அதேவேளையில் பாறைகளை உடைக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
 • எந்தவொரு எரிபொருளும் வெடிக்க குறிப்பிட்ட சில காரணங்கள் தேவை.
 • அதே விதிதான் அமோனியம் நைட்ரேட்டுக்கும் பொருந்தும்.
 • அமோனியம் நைட்ரேட் மிகவும் ஆற்றல் கொண்டது.
 • இது அதிக அளவு வெப்பத்தை வெளியிடுகிறது.
 • ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் அம்மோனியம் நைட்ரேட் இருந்தால் அது தீப்பிழம்பு போன்று வெளிப்புற வினைகள் பயன்படாமல் நெருப்பை வெளியிடுகிறது.
 • அமோனியம் நைட்ரேட்டில் இருந்து  ஆக்ஸிஜன் வெளியாகும் வாய்ப்பு உள்ளதால், கொழுந்து விட்டு எரிவதற்கு வசதியாக உள்ளது. 
 • பயங்கரவாதிகளும் தங்கள் தாக்குதல்களுக்கு  அமோனியம் நைட்ரேட்டை பயன்படுத்தும் போக்கு தற்போது அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
 • இதற்கு முன்பு நடந்த அமோனியம் நைட்ரேட் விபத்து 1921 ஆம் ஆண்டில் ஜெர்மனியில் அமோனியம் நைட்ரேட் வெடி பொருள் வெடித்து விபத்து ஏற்பட்டது.
 • இந்த விபத்தில் 500 பேர் பலியாகினர்.
 • அமெரிக்காவில் 1947 ஆம் ஆண்டு டெக்ஸாஸ் மாகணத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் அமோனியம் நைட்ரேட் வெடித்தது.
 • இதில் 581 பேர் பலியாகினர்.
 • கடந்த 2015- ஆம் ஆண்டு சீனாவின் தியான்ஜின் நகரில்  நடைபெற்ற விபத்தில் அமோனியம் நைட்ரேட்  உள்பட வேதிப்பொருள் வெடித்தது.
 • இதில் 173 பேர் பலியாகினர்.

 

நன்றி தினதந்தி

ஜனனி சிசு சுரக்ஷா திட்டம்
நலன்புரி சார்ந்த அரசு திட்டங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடு
 • பிறக்கும் குழந்தைகளின் நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பெரும் பணம் செலவிடுவதற்கு சிரமப்படும் பெற்றோரின் துயரத்தைக் குறைப்பதாற்காக மத்திய சுகாதார-குடும்பநல அமைச்சகம் இத்திட்டத்தைச் செயல்படுத்துகிறது.
 • கருவுற்ற பெண்களுக்கும், பிறந்து 30 நாள் வரையுள்ள சிசுக்களுக்கும் அவை சுகப்பிரசவத்தில் அல்லது அறுவை சிகிச்சை மூலம் (சிசேரியன்) பிறந்திருந்தாலும் எவ்வித கட்டணமும் இல்லாத இலவச மருத்துவ சிகிச்சை இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது.
 • கிராமப்பகுதிகளிலும் நகர்ப்பகுதிகளிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் செயல்படும் இந்தத் திட்டம் 2011 ஆம் ஆண்டு ஜுன் முதல் தேதியன்று தொடங்கப்பட்டது.
கிருஷ்ணதேவராயர்
முக்கிய நபர்கள் மற்றும் செய்திகளில் இடங்கள்

கிருஷ்ணதேவராயர்

 

 

அரசி சின்னம்பிகா, திருமலம்பிகா
துளுவம் ಶ್ರೀ ಕೃಷ್ಣದೇವರಾಯ
கன்னடம் ಶ್ರೀ ಕೃಷ್ಣದೇವರಾಯ
தெலுங்கு శ్రీ కృష్ణదేవరాయ
அரச குலம் துளுவ மரபு
தந்தை துளுவ நரச நாயக்கன்
தாய் நாகலா தேவி
 • கிருஷ்ணதேவராயர் (Krishnadevarayaவிஜயநகரப் பேரரசின் பேரரசர்களிலே மிகவும் புகழ் பெற்றவர் ஆவார்.
 • இவரது ஆட்சிக் காலமே பேரரசின் மிக உயர்ந்த நிலை ஆகும்.
 • இவர், கன்னட மற்றும் தெலுங்கு மக்களிடையே பெரும் வீரனாக மதிக்கப்படுவதுடன், இந்தியாவின் பெருமைமிகு அரசர்களில் ஒருவருமாவார்.
 • இவர், ஆந்திர போஜன்கன்னட ராஜ்ய ராம ரமணன் என்றும் அழைக்கப்பட்டவர்.
 • இவரைப் பற்றிய தகவல்கள் பெரும்பாலும் போத்துக்கீசப் பயணிகளான, டொமிங்கோ பயஸ் (Domingos Paes), பெர்னாவோ நுனிஸ் (Nuniz) ஆகியோரின் எழுத்துக்கள் மூலமாகவே கிடைத்துள்ளன.

 

சங்கம மரபு
ஹரிஹர ராயன் I 1336-1356
புக்கா ராயன் I 1356-1377
ஹரிஹர ராயன் II 1377-1404
விருபக்ஷ ராயன் 1404-1405
புக்கா ராயன் II 1405-1406
தேவ ராயன் I 1406-1422
ராமச்சந்திர ராயன் 1422
வீரவிஜய புக்கா ராயன் 1422-1424
தேவ ராயன் II 1424-1446
மல்லிகார்ஜுன ராயன் 1446-1465
விருபக்ஷ ராயன் II 1465-1485
பிரௌத ராயன் 1485
சாளுவ மரபு
சாளுவ நரசிம்ம தேவ ராயன் 1485-1491
திம்ம பூபாலன் 1491
நரசிம்ம ராயன் II 1491-1505
துளுவ மரபு
துளுவ நரச நாயக்கன் 1491-1503
வீரநரசிம்ம ராயன் 1503-1509
கிருஷ்ண தேவ ராயன் 1509-1529
அச்சுத தேவ ராயன் 1529-1542
சதாசிவ ராயன் 1542-1570
அரவிடு மரபு
அலிய ராம ராயன் 1542-1565
திருமலை தேவ ராயன் 1565-1572
ஸ்ரீரங்கா I 1572-1586
வெங்கடா II 1586-1614
ஸ்ரீரங்கா II 1614-1614
ராமதேவா 1617-1632
வெங்கடா III 1632-1642
ஸ்ரீரங்கா III 1642-1646

 

பாலைவனம்
புவியியல் அடையாளங்கள்

1. சஹாரா பாலைவனம் அமைந்துள்ள பகுதி எது? - வட ஆப்பிரிக்கா

2. ஆஸ்திரேலியா பாலைவனம் அமைந்துள்ள பகுதி எது? - ஆஸ்திரேலியா

3. அரேபியன் பாலைவனம் அமைந்துள்ள பகுதி எது? - தென் மேற்கு ஆசியா

4. தக்ல மகான் பாலைவனம் அமைந்துள்ள பகுதி எது? - சீனா

5. கோபி பாலைவனம் அமைந்துள்ள பகுதி எது? - மத்திய ஆசியா

6. கலஹாரி பாலைவனம் அமைந்துள்ள பகுதி எது? - தென் ஆப்பிரிக்கா

7. தர்கஸ்தான் பாலைவனம் அமைந்துள்ள பகுதி எது? - மத்திய ஆசியா

8. நபீப் பாலைவனம் அமைந்துள்ள பகுதி எது? - தென் மேற்கு ஆப்ரிக்கா

9. சோமாலி பாலைவனம் அமைந்துள்ள பகுதி எது? - சோமாலியா

10. சோனோரன் பாலைவனம் அமைந்துள்ள பகுதி எது? - அமெரிக்கா, மெக்சிக்கோ

11. தார் பாலைவனம் அமைந்துள்ள பகுதி எது? - இந்தியா, பாகிஸ்தான்

12. விக்டோரியா பாலைவனம் அமைந்துள்ள பகுதி எது? - ஆஸ்திரேலியா

13. அடகாமா பாலைவனம் அமைந்துள்ள பகுதி எது? - தென் ஆப்பிரிக்கா (சிலி)