TNPSC Current Affairs : April-28-2020
கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
விருதுகள்

கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு தனி ருசி உண்டு. கோவில்பட்டி என்றும் கடலை மிட்டாயை நினைவுகூரும் அளவிற்கு தனிப்பெயர் பெற்றுள்ளது. இந்நிலையில், கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு பெற 2014இல் அப்போது சார் ஆட்சியராக இருந்த விஜயகார்த்திகேயன் மூலம் விண்ணப்பிக்கப்பட்டது. பின்னர், புவிசார் குறியீட்டு அலுவலகத்தின் அறிவுறுத்தலில் கோவில்பட்டி வட்டார கடலை மிட்டாய் உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர் நலச் சங்கம் என்ற பெயரில் மறுசீரமைப்பு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 2019இல் சமர்ப்பிக்கப்பட்டது. இதையேற்று கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காஞ்சிபுரம் பட்டு, விருப்பாச்சி வாழைப்பழம், கொடைக்கானல் மலைப்பூண்டு, ஈரோடு மஞ்சள், பழனி பஞ்சாமிர்தம் என 33 பொருள்களுக்கு ஏற்கெனவே புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 34ஆவது பொருளாக கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு கிடைக்கப்பெற்றுள்ளது.

நடிகர் ரிஷி கபூர்
விருதுகள்

1973-ல் கதாநாயகனாக நடித்து அறிமுகமான படம் - பாபி. இந்தியா முழுக்க பரபரப்பாகப் பேசப்பட்ட பாபி தான் கடைசி வரைக்கும் ரிஷி கபூரின் முக்கிய அடையாளமாகவும் வெற்றிகரமான படமாகவும் அறியப்படுகிறது. ரிஷி கபூரின் தந்தையும் புகழ்பெற்ற நடிகரும் இயக்குநருமான ராஜ் கபூர் இயக்கிய இந்தப் படத்தில் தான் டிம்பிள் கபாடியாவும் நடிகையாக அறிமுகமானார். 1970-ல் வெளியான மேரா நாம் ஜோக்கர் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ரிஷி கபூர், கதாநாயகனாக அறிமுகமான முதல் படத்திலேயே இந்திய அளவில் புகழை அடைந்தார்.