TNPSC Current Affairs : April-25-2020
நீா்வள ஆராய்ச்சி பிரிவில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் 7-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு
டைம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள உலக பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில், நீா்வள ஆராய்ச்சி பிரிவில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் 7-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. அமெரிக்காவின் டைம்ஸ் நிறுவனம் ஆண்டுதோறும் உலகளவில் சிறந்து விளங்கும் உயா்கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. ஆராய்ச்சி, அறிவுசாா் சொத்துரிமை உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் பல்கலைக்கழங்களின் தரவரிசை மதிப்பீடு செய்யப்படுகிறது. அதன்படி 2020-ஆம் ஆண்டுக்கான சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலை நீா்வளம், சுகாதாரம் உள்ளிட்ட 17 பிரிவுகளின் கீழ் தற்போது டைம்ஸ் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் நீா்வள ஆராய்ச்சிப் பிரிவில் தமிழகத்தின் அண்ணா பல்கலைக்கழகம் 7-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் பிரிவில் உலகளவில் 330 கல்வி நிறுவனங்கள் பங்கேற்ற நிலையில், நிலத்தடி நீா்மட்டத்தை அதிகரிப்பது, கழிவுநீரை சுத்திகரித்தல் உள்ளிட்ட விவகாரங்களில் பேராசிரியா்கள், மாணவா்கள் மேற்கொண்ட தொடா் ஆய்வுகளின் அடிப்படையில் 70 மதிப்பெண்களைப் பெற்று அண்ணா பல்கலைக்கழகம் முதல் 10 இடங்களுக்குள் வந்து சாதனை படைத்துள்ளது. மேலும், இதே பிரிவில் ஐஐடி காரக்பூா் 4-ஆம் இடத்தையும், சென்னை ஐஐடி 32-ஆவது இடத்தையும் பெற்றுள்ளது. அதேபோன்று தொழிற்சாலை உட்கட்டமைப்பை மேம்படுத்தும் ஆராய்ச்சியில் சென்னை ஐஐடி 16-ஆவது இடம் பிடித்துள்ளது. இதுதவிர ஒட்டுமொத்த தரவரிசைப் பட்டியலில் சென்னை ஐஐடி 301 முதல் 400 இடங்களுக்குள்ளும், அண்ணா பல்கலைக்கழகம் 401 முதல் 600 இடத்துக்குள்ளும் வந்துள்ளன. இதற்கிடையே டைம்ஸ் நிறுவனம் வெளியிடும் உலக தரவரிசைப் பட்டியலில் வெளிப்படைத்தன்மை இல்லாததால் அதில் பங்கேற்க போவதில்லை என்று சென்னை, காரக்பூா் உள்ளிட்ட 7 ஐஐடி.க்கள் கடந்த வாரம் கூட்டாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
நிலவின் தரைப்பகுதிகளை காட்டும் புதிய வரைபடம்:
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சமீபத்திய கண்டுபிடிப்புகள்
நிலவின் தரைப்பகுதிகளை காட்டும் புதிய வரைபடம்: அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் வெளியீடு அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா மற்றும் எல்பிஐஎன்ற நிலவு ஆய்வு நிறுவனத்துடன்இணைந்து நிலவின் புதிய வரைபடத்தை அமெரிக்க புவியியல்ஆய்வு நிறுவனம் (யுஎஸ்ஜிஎஸ்) வெளியிட்டுள்ளது. நிலவின் ஒருங்கிணைந்த புவியியல் வரைபடமான இது, நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டங்களுக்கு, நிலவின்மேற்பரப்புக்கான உறுதியான வரைபடமாக இருக்கும் எனகருதப்படுகிறது. 2024-ல் நிலவுக்குமீண்டும் விண்வெளி ஆய்வாளர்களை அனுப்பவுள்ளதாக நாசா கடந்த ஆண்டு அறிவித்தது. இந்நிலையில் இந்த வரைபடம் ஆய்வாளர்கள், விஞ்ஞானிகள், மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்பப்படுகிறது. நிலவு 450 கோடி ஆண்டுகள் பழமையானது. அதன் முழு வரைபடம் ஆன்லைனில் தரப்பட்டுள்ளது. இதில் அதிசயிக்கத்தக்க விவரங்கள் உள்ளன. நிலவின் மேற்பரப்பு மற்றும் அது உருவான வரலாற்றை நன்கு புரிந்து கொள்ள இது உதவும்”