TNPSC Current Affairs : April-10-2021
‘உத்கல் கேசரி’ ஹரேகிருஷ்ணா மஹதாப்
முக்கிய நபர்கள் மற்றும் செய்திகளில் இடங்கள்

‘உத்கல் கேசரி’ ஹரேகிருஷ்ணா மஹதாப்

  • சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர்களில் ஒருவர் ஆவார்.
  • இவர் 1946 முதல்1950 வரை மற்றும் 1956 முதல் 1961வரையில் ஒடிசா முதல்வராக பதவி வகித்துள்ளார்.
  • மாநில வளர்ச்சிக்காக அரும் பாடுபட்டவர் ஆவார்.
  • இவர் எழுதிய ஒடிசா இதிகாசம் என்ற நூல் இதுவரை, ஒடியா மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டுமே இருந்து வந்தது.
  • இந்நிலையில் இதன் இந்தி மொழி பதிப்பை பிரதமர் நரேந்திர மோடி நேற்று வெளியிட்டார். 
குரு தேஜ் பகதூர்
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு

குரு தேஜ் பகதூர் 

  • சீக்கியர்களின் 10 குருமார்களில் 9-வது குருவாகப் போற்றப்படுபவர் குரு தேஜ் பகதூர்.
  • கடந்த 1665-ம் ஆண்டு முதல் 1675-ம் ஆண்டு வரை குரு தேஜ் பகதூர், சீக்கியர்களின் தலைவராக இருந்தார். 75-ம் ஆண்டு அவர் கொல்லப்பட்டார்.
  • குரு தேஜ் பகதூரின் 400-வது ஜெயந்தி விழாவை மிகச் சிறப்பாக இந்தியா நடத்தும்.