TNPSC Current Affairs : April-05-2021
RRB /TNPSC CURRENT AFFAIRS
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு

 

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,357 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

நாடு முழுவதும் 7.9 கோடிக்கும் அதிகமான பயனாளிகளுக்கு தடுப்பூசிகளை செலுத்தப்பட்டுள்ளது.

 

தேவகவுடா கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பூரண நலம் பெற்றதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

அசாமில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் 90 வாக்காளர்களே இருந்த நிலையில், 171 வாக்குகள் பதிவானதால் தேர்தல் அலுவலர்கள் 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

 

கொரோனா தடுப்புப்பணிகள் குறித்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

 

ரஃபேல் ஒப்பந்தத்தில் 1.1 மில்லியன் யூரோ 'கமிஷன்' கொடுக்கபட்டது என பிரெஞ்சு ஊடகங்கள் கூறியதை அடுத்து விசாரணை கோரும் காங்கிரஸ், முற்றிலும் ஆதாரமற்றது பா.ஜ.க மறுத்து உள்ளது.

RRB /TNPSC CURRENT AFFAIRS
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு

நியூசிலாந்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. இது நியூசிலாந்தின் கிழக்குக் கடலைத் தாக்கியதோடு, வடக்கு தீவிலும் பரவலாக உணரப்பட்டது.

ஸ்மார்ட்போன் தயாரிப்புத் துறையில் கடும் இழப்பு ஏற்பட்டிருப்பதைத் தொடர்ந்து, செல்லிடப்பேசி தயாரிப்பு பணியிலிருந்து முற்றிலும் விலகுவதாக எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் அறிவித்துள்ளது.

இங்கிலாந்தில் உள்ள குடிமக்கள் அனைவரும் வாரத்திற்கு இரண்டு முறை கரோனா தொற்றுக்கு இலவசமாகப் பரிசோதிக்கப்படுவார்கள் என்று அந்நாட்டு அரசு திங்களன்று அறிவித்துள்ளது.

இந்தோனேசியாவின் கிழக்கு நுசா தெங்கரா மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாகப் பலியானோர் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13.191 கோடியைத் தாண்டியுள்ளது.

செவ்வாய் கிரகத்துக்கு அமெரிக்கா அனுப்பியுள்ள ‘பொ்சிவரன்ஸ்’ ஆய்வுக் கலத்திலுள்ள சிறிய ஹெலிகாப்டா், பறப்பதற்குத் தயாராக அந்த கிரகத்தின் மேற்பரப்பில் நிறுத்தப்பட்டுள்ளது.

ஆட்சிக் கவிழ்ப்பு குற்றச்சாட்டின் பேரில் ஜோா்டான் அரசு தன்னை வீட்டுச் சிறையில் வைத்துள்ளதாக அந்த நாட்டு இளவரசா் ஹம்ஸா பின் ஹுசைன் தெரிவித்துள்ளாா்.

 

 

 

 

 

இன்றைய செய்தித்தாளில் இடம் பெற்றவை
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு

இந்தோனேசியாவில் தொடா்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் 23 போ் உயிரிழந்தனா்.

கனடாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை லட்சத்தைக் கடந்தது.